கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
AIADMK MLAs Join BJP: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது.
Tamil Nadu Political News: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் தேசிய தலைநகரம் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தனர். 'மிஷன் சவுத்' பிளானின் ஒரு பகுதியாக ஆபரேஷன் தாமரை திட்டத்தை தமிழ்நாட்டில் பாஜக செயல்படுத்த தொடங்கி விட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
காங்கிரஸில் இருந்து ஒரு முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், திமுகவை சேர்ந்த ஒரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜகவில் இணைந்தனர். அதேபோல தேமுதிக கட்சியை சேர்ந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் இணைந்துள்ளார். மேலும் அதிமுகவை சேர்ந்த 18 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் விவரம்
வடிவேல் (கரூர்)
சேலஞ்சர் துரைசாமி (கோயம்புத்தூர்)
பி.எஸ்.கந்தசாமி (அரவக்குறிச்சி)
எம்.வி. ரத்தினம் (பொள்ளாச்சி)
ஆர். சின்னசாமி (சிங்காநல்லூர்)
கோமதி சீனிவாசன் (வலங்கைமான்)
வி. ஆர். ஜெயராமன் (தேனி)
எஸ்.எம். வாசன் (வேடசந்தூர்)
பி.எஸ். அருள் (புவனகிரி)
ஆர். ராஜேந்திரன் (காட்டுமன்னார்கோயில்)
கருப்புசாமி (அவினாசி)
செல்வி முருகேசன் (காங்கேயம்)
ஏ. ரோகினி (கொளத்தூர்)
தமிழலகன் (திட்டக்குடி)
எஸ்.இ. வெங்கடாசலம் (சேலம்)
முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி)
ஆர். தங்கராசு (ஆண்டிமடம்)
எஸ். குருநாதன் (பாளையம்கோட்டை)
வி. குழந்தைவேலு (சிதம்பரம்)
மேலும் படிக்க - பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன எடப்பாடி, டெல்லி பறந்த ஜி.கே.வாசன்..!
மேலும் படிக்க - அண்ணாமலை நோட்டாவை வெற்றிபெறுவாரா? ஜெயக்குமார் கிண்டல்!
மேலும் படிக்க - 'ஆட்டு குட்டிகளை விட்டு ஆழம் பார்க்க கூடாது' - பாஜக குறித்து ஜெயக்குமார் அதிரடி
மேலும் படிக்க - திமுகவை தோற்கடிக்க அருமையான சந்தர்ப்பம் - எடப்பாடி கொடுத்த சிக்னல்
மேலும் படிக்க - அண்ணாமலைக்கு அருகதை இல்லை: கேபி முனுசாமி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ