பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன எடப்பாடி, டெல்லி பறந்த ஜி.கே.வாசன்..!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வர டெல்லி மேலிடம் முயற்சி செய்ய, அதற்கு எடப்பாடி பழனிசாமி நோ சொல்லிவிட்டாராம். ஜி.கே.வாசன் மூலம் எடுத்த முயற்சி இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 4, 2024, 06:34 AM IST
  • எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகம்
  • கூட்டணிக்கு அழைக்கும் டெல்லி பாஜக
  • ஜி.கே.வாசன் மூலம் நோ சொன்ன இபிஎஸ்
பாஜக கூட்டணிக்கு நோ சொன்ன எடப்பாடி, டெல்லி பறந்த ஜி.கே.வாசன்..! title=

நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் விரைவில் நடைபெற இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் அக்கட்சி அதிகாரப்பூர்வமாக முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும் நிலையில், அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் அதிமுகவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு காரணம் அதிமுக, பாஜக கூட்டணி இல்லை என தெளிவாக கூறிவிட்டது. அதிமுக தலைமையில் தனித்து கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்களும் இதனையே விரும்புகின்றனர். ஏனென்றால், அதிமுக நாடாளுமன்ற தேர்தலைக் காட்டிலும் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே இப்போது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பாஜகவோடு இருந்தால் அது சாத்தியமில்லை என்கிற முடிவுக்கு அதிமுக வந்திருக்கிறது. ஆனால், அமித் ஷா மற்றும் மோடி அதிமுக பாஜக கூட்டணியில் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனராம்.

மேலும் படிக்க | வாடிக்கையாளரை காத்திருக்க வைத்த ஹோட்டல்.... ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

அதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனிடம், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இருவரும் அதிமுக வாக்குகள், அதிமுகவின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்றால் அதிமுகவுக்கு ஓகே, ஆனால் தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணிக்குள் வர விருப்பம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டாராம்.

இதனை கேட்டுக் கொண்ட ஜி.கே.வாசன் உடனடியாக இந்த தகவலுடன் டெல்லி பறந்தார். அங்கு ஜே.பி.நட்டாவை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு மற்றும் அதிமுகவின்  நிலை என்ன என்பது குறித்து எடுத்து சொல்லியிருக்கிறாராம். இதனைக் கேட்டுக் கொண்ட நட்டா, அமித்ஷாவிடம் கலந்து பேசிவிட்டு தங்களின் நிலைப்பாட்டை சொல்கிறோம் என கூறியிருக்கிறாராம். இதற்கான எதிர்வினை இன்னும் சில நாட்களில் வெளிப்படையாக தெரியவரும் என கூறுகிறது டெல்லி வட்டாரம். பாஜக கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் அதிமுகவினரை சுற்றி ரெய்டு பறக்கவும் வாய்ப்பிருக்கிறதாம். அத்துடன் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை மீண்டும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வந்திருக்கிறதாம். இதனால் குழப்பத்தில் இருக்கிறதாம் அதிமுக வட்டாரம். 

மேலும் படிக்க | 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள்! ஆருடம் சொல்லும் பாஜக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News