மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக!
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தற்போது எம்.பி.க்காளாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் வரும் 29-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார், நவனீதகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலங்கள் நிறைவடைய உள்ளன.
தற்போதைய சூழலில் ஒரு மாநிலங்களவை எம்.பி. வெற்றி பெற 34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. எனவே 159 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள திமுக 4 எம்.பி பதவிகளை பெற முடியும். இதே போன்று 75 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள அதிமுக கூட்டணிக்கு இரண்டு எம்.பி. இடங்கள் கிடைக்கும்.
மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு மே 31-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற மே 3-ம் தேதி கடைசி தினமாகும்.
மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?
இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளார் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் கிரிராஜன், நாமக்கல் திமுக மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் உள்ள ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி அல்லது மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | திருமாவளவனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் திமுக உறுப்பினர்கள்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe