தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களையும், வேட்பாளர் விவரங்களையும் பொது மக்கள் பதிபிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு வேட்பாளரின் பக்கம் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும்போதும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
துரைமுருகனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்ற செய்தி வந்ததிலிருந்து தொண்டர்களுக்கு இடையே அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் காலமானார்.
அரக்கோணம் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கொரோனா தொற்று உறுதியான துரைமுருகன் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடக்கின்றன.
மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பொய் வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கபட்டுள்ளது.
செந்தாமரை மற்றும் இன்னும் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் "அரசியல் நோக்கத்துடனான பண விநியோகத்தை" பரிசோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (Tamil Nadu Assembly Polls 2021) திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.