Vijayakanth Live Update: கண்ணீர் கடலில் கோயம்பேடு... தீவுத்திடலுக்கு எடுத்துச்செல்லப்படும் விஜயகாந்த் உடல்!

Thu, 28 Dec 2023-8:41 pm,

DMDK Chief Vijayakanth Live Update News: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று மறைந்தார். அவரது மறைவு குறித்து தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

DMDK Chief & Actor Vijayakanth Live Update News in Tamil: தேமுதிக தலைவர், பிரபல நடிகருமான விஜயகாந்த் (71) இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என மியாட் மருத்துவமனை உறுதிசெய்தது. தொடர்ந்து, அவரது உடல் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அவரது மனைவி பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாளை மாலை 4.45 மணிக்கு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திலேயே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த் குறித்து அறிய இவற்றையும் படியுங்கள்:


புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு -எழுத்தாளர். ஜி. பாலன்


விஜயகாந்த் ‘கேப்டன்’ என அழைக்கப்படுவது ஏன்? அடைமொழிக்கு பின்னால் இருக்கும் பெரிய கதை!


நிஜ வாழ்விலும் அவர் வாரி வழங்கிய சின்ன கவுண்டர்தான்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


Vijayakanth Unknown Facts : சம்பளம் வாங்காத நடிகர்..இயற்பெயர் வேறு..விஜயகாந்த் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்!


RIP Vijayakanth: கறுப்பு நிறம்.. சிரித்த முகம்... கம்பீர நடை... கணீர் குரல்..! -ஓய்வெடுங்கள் கேப்டன்


மைக்கேல் ஜாக்சனுக்கு டஃப் கொடுத்த கேப்டன் விஜயகாந்தின் வைரல் நடன வீடியோ


விஜயகாந்தின் ‘இந்த’ புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?


கெத்தான கேப்டன்... சிவாஜி இறுதி ஊர்லத்தில் சிங்கமாய் சீறிய விஜயகாந்த்! வைரல் வீடியோ


விஜயகாந்த் ராசி எண் இதுவா?.. விருத்தாச்சலம் தொகுதியை இதுக்கு தான் தேர்ந்தெடுத்தாரா?


மிஸ் யூ கேப்டன்! கருப்பு MGR விஜயகாந்தை போலவே சினிமாவிலும் அரசியலிலும் தடம் பதித்த நடிகர்கள்

Latest Updates

  • Vijayakanth Live Update: தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்தின் உடல்

    மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. நாளை அதிகாலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மதியம் 1 மணிவரை அங்கு வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் கோயம்பேடு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

  • Vijayakanth Live Update: தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்திற்கு நினைவிடம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நடிகர் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அங்கு அவர் குறித்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து நேரடியாக பார்க்கும் வகையில், அலுவலக வாயிலில் நுழைந்தவுடன் பார்வையில் படும் வகையிலும் இந்த நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தேமுதிக அலுவலகத்தில் உள்ள ராட்சத் கட்சிக் கொடியின் கீழ் நாளை அவரது இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, குறித்துவைக்கப்பட்ட இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜேசிபி இயந்திரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

     

     

  • Vijayakanth Live Update: ராஜாஜி அரங்கில் விஜயகாந்த் உடல்?

    சென்னை கோயம்பேட்டில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூட்டம் அதிகமாகி வரும் சூழலில், நெருக்கடியை சமாளிக்க அவரது உடலை ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உடன் அரசு அதிகாரிகள் தொலைப்பேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • Vijayakanth Live Update: நடிகர் சூர்யா இரங்கல்

    விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு, நடிகர் சூர்யா அவரின் X பதிவில்,"அவருடன் பணியாற்றிய, பேசிப் பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை. யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.

  • Vijayakanth Live Update: சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார்

    நாகர்கோவிலில் இன்று நடக்க இருந்த 'வேட்டையன்' படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, கேப்டன் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vijayakanth Live Update: அண்ணாமலையின் 2 கோரிக்கைகள்

    அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,"மக்கள் அதிகமானோர் அஞ்சலி செலுத்த வருவதால் உடனடியாக விஜயகாந்தின் உடலை அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாக அரசு மரியாதையுடன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர், அவருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும்" என்றார். 

  • Vijayakanth Live Update: அண்ணாமலை அஞ்சலி

    மறைந்த விஜயகாந்த் உடலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு இரண்டு முக்கிய கோரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

  • Vijayakanth Live Update: எஸ்பி வேலுமணி இரங்கல்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    விஜயகாந்த மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி இரங்கல் தெரிவத்தார். அதில்,"விஜயகாந்த் மறைந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் துக்கமான செய்தி. விஜயகாந்த் ஒரு சாமானியராக இருந்து மிகப்பெரிய அளவில் பல படங்களில் நடித்து நடிகர் சங்கத்திற்கும் தலைவராக இருந்து பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார்.

    அதுமட்டுமின்றி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சிறப்பான முறையில் பணியாற்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றியவர். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மிகவும் வருந்ததக்கது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் திரை துறையினருக்கும் இரங்கல் தெரிவித்து, இறைவன் அவர்களுக்கு தைரியத்தை தர வேண்டும்" என்றார்.

  • Vijayakanth Live Update: பருந்து பார்வையில் கோயம்பேடு

  • Vijayakanth Live Update: அடக்கம் செய்யும் இடத்தை அளவிடும் பணி

    கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அவர் அடக்கம் செய்யப்படும் இடத்தை அளவிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. 

  • Vijayakanth Live Update: கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்

    மறைந்த விஜயகாந்தின் உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, நகரின் முக்கிய பகுதியான கோயம்பேட்டில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கோயம்பேடு பகுிதியின் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர். அந்த வகையில், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாடி மேம்பாலம், திருவீதி அம்மன் சர்வீஸ் ரோடு, சாந்திகாலனி வழியே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். 

  • மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் அஞ்சலி செலுத்திய கோவை பா.ஜ.க.வினர்:

    கோவை, சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜய்காந்த்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பா.ஜ.க மாவட்ட தலைவர் J.ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.  இதில் மாநில துணை தலைவர் பேராசிரியர்  கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

  • Vijayakanth Live Update: எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட ஆடியோ

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவரது பேஸ்புக் பக்கத்தில் விஜயகாந்தை மறைவையொட்டி அவரே பேசிய ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் விஜயகாந்திற்காக மொத்தம் 19 படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijayakanth Live Update: பிரபலங்கள் நேரில் அஞ்சலி

    கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் கவுண்டமணி, தியாகு, பாடலாசிரியர் வைரமுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  

  • Vijayakanth Live Update: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ரத்து

    சென்னையில் நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யப்பட்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா, விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த இந்த நிகழ்வில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருந்தனர். 

  • Vijayakanth Live Update: கண்ணீர் மழையில் கோயம்பேடு

    சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டுவரப்பட்டது.  அங்கு அவருக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ள நிலையில், அனைவரும் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். விஜயகாந்தின் மனைவி, மகன்கள், மைத்துனர், நண்பர்கள், சக நடிகர்கள், கட்சி பிரமுகர்கள் என அவரின் உடலை சுற்றி நிற்கும் அத்தனை பேரும் கதறி அழும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

  • Vijayakanth Live Update: தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல்

    சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட உடல் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மாலை 4.45 மணிக்கு அங்கேயே அவரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

  • Vijayakanth Live Update: மொட்டை அடித்து அஞ்சலி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி மதுரை அவனியாபுரத்தில் தேமுதிக தொண்டர்கள் மொட்டை அடித்து, ஒப்பாரி பாட்டு பாடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

     

  • Vijayakanth Live Update:  முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

  • Vijayakanth Live Update: நடிகர் சங்க தலைவராக கலக்கியவர்

    1999ஆம் ஆண்டு நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், சங்கத்திற்கு இந்த இருந்த கடன்களை வட்டியோடு சேர்த்து அடைத்ததாக கூறப்படுகிறது.

  • Vijayakanth Live Update: தேமுதிக அறிவிப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தேமுதிக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், தமிழக திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். 

    கேப்டன் அவர்களின் இறுதி மரியாதை நாளை (டிச.29) வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகமான கோயம்பேட்டில் நடைபெற உள்ளது என்பதை மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளது. மேலும், 15 நாட்களுக்கு தேமுதிக கொடி அரை கம்பத்திற்கு பறக்கவிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vijayakanth Live Update: ஒருவாட்டி முகத்தை காட்டுங்க - கதறும் தேமுதிக தொண்டர்கள்!

  • Vijayakanth Live Update: விஜயகாந்த் தேர்தல் வரலாறு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    => 2006 - சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக 232 இடங்களில் தனித்து போட்டியிட்டது. விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மட்டுமே வெற்றி பெற்றாலும் 8.4 சதவீத ஓட்டுக்களை பெற்றார். 

    => 2009 - மக்களவை தேர்தலிலும் தேமுதிக தனித்து நின்றது. அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தாலும் 10 சதவீதம் வரை வாக்குகளை அக்கட்சி அப்போது பெற்றது. 

    => 2011 - திராவிட கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்ற தனது நிலைப்பாட்டை மாற்றி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றது. விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். 7.9 என வாக்கு சதவீதம் குறைந்தது. முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக முறித்துக்கொண்டது. 

    => 2014 - மக்களவை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தமிழ்நாட்டில் இந்த கூட்டணி தோல்வியை கண்டது. 14 இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. 6.1 வாக்கு சதவீதத்தையே பெற்றது. 

    => 2016 - சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தாமாக ஆகியவை இணைந்து விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தது. இதில் தேமுதிக போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் மூன்றாவது இடத்தை தான் பிடித்தார், டெபாசிட்டையும் இழந்தார். இதில் வெறும், 2.4 சதவீத வாக்கையே அந்த கட்சி பெற்றது.

    => 2019 - மக்களவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியுடன் சேர்ந்த தேமுதிக 4 தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை கண்டது. 

    => 2021 - அமமுக உடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் எந்த தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை. 

  • Vijayakanth Live Update: விஜயகாந்தின் அரசியல் வாழ்வு - தொடக்கம் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    => 1982 - ரசிகர் மன்றத்தின் பெயரை,"தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்" என்று மாற்றம் செய்தார்.

    => 2000 - பிப்.12ஆம் தேதி அவரது ரசிகர் மன்றத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார். 

    => 2001 - உள்ளாட்சித் தேர்தலில் அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றனர். 

    => 2002 - ராஜ்ஜியம் படத்தில் இருந்து அவரது படங்களில் அரசியல் வசனங்கள் அதிகமாகின.

    => 2005 - செப்.14ஆம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தினார். அப்போது தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

  • Vijayakanth Live Update: நீண்ட வரிசையில் காத்திருக்கும் தொண்டர்கள்

  • Vijayakanth Live Update: தேமுதிக அலுவலகத்திலேயே நல்லடக்கம்

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நாளை மாலை 4:45 மணியளவில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இன்று காலை 6.10  மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்தார் என அவரது மைத்துனர் சுதீஷ் தகவல் அளித்துள்ளார். மேலும், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

  • Vijayakanth Live Update: ஆளுநர் ஆர்.என்.ரவி

    ஆளுநர் ஆர்.என். ரவி அவரது X தளத்தில்,"சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவருமான, சிறந்த மனிதநேயவாதியான விஜயகாந்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி" என குறிப்பிட்டுள்ளார். 

  • Vijayakanth Live Update: தயாராகி வரும் ராஜாஜி அரங்கம்

    சென்னை ராஜாஜி அரங்கத்திற்கு உடல் எடுத்துச்செல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ராஜாஜி அரங்கம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதியத்திற்கு பின் உடல் அங்கு எடுத்துச்செல்லப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

  • Vijayakanth Live Update: தீராத உழைப்புக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்

    1984ஆம் ஆண்டு விஜயகாந்த் மொத்தம் 18 திரைப்படங்களை நடித்து திரையுலகில் தனித்த சாதனை ஒன்றை படைத்தார். ஒரு நாளுக்கு 2-3 கால்ஷீட்டில் அவர் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தளவிற்கு சினிமாவிற்கு தன்னை அர்ப்பணித்தவராக விஜயகாந்த் திகழ்கிறார்.

  • Vijayakanth Live Update: இயக்குநர் மாரிசெல்வராஜ் இரங்கல் பதிவு

  • Vijayakanth Live Update: நிர்மலா சீதாராமன் இரங்கல்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,"கேப்டன் விஜயகாந்த் இப்போது இல்லை. இரங்கல்கள். 'பொன் இதயம் கொண்ட மனிதன்' என்று அறியப்பட்டவர். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு 'பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்' என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijayakanth Live Update: ராகுல் காந்தி இரங்கல்

    காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி,"தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

  • Vijayakanth Live Update: நாளை இறுதிச்சடங்கு

    மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நாளை (டிச.28) இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது மனைவி பிரேமலதா அறிவித்துள்ளார்.

  • Vijayakanth Live Update: பொது இடத்தில் அடக்கம் செய்ய கோரிக்கை

    விஜயகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, விஜய்காந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய முதலமைச்சரிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Vijayakanth Live Update: பிரதமர் மோடியின் இரங்கல் பதிவு

    பிரதமர் மோடி அவரது X பக்கத்தில், "விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு லட்சக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது, அது நிரப்ப கடினமாக இருக்கும். அவர் நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மீது உள்ளது, ஓம் சாந்தி" என குறிப்பிட்டுள்ளார்.

  • Vijayakanth Live Update: பிரதமர் மோடி இரங்கல்

  • DMDK Cheif Vijayakanth Live Update: விஜயகாந்திற்கு அரசு மரியாதை

    முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில்,"அன்பிற்கினிய நண்பர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link