விஜயகாந்த் ‘கேப்டன்’ என அழைக்கப்படுவது ஏன்? அடைமொழிக்கு பின்னால் இருக்கும் பெரிய கதை!

Captain Vijayakanth Special Title Reason: நடிகரும் தேமுதிக கட்சி  தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். இவரை மக்கள் கேப்டன் என அழைக்கின்றனர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 28, 2023, 11:57 AM IST
  • நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் 71வது வயதில் உயிரிழந்தார்.
  • இவரை அனைவரும் ‘கேப்டன்’ என அழைப்பதுண்டு.
  • இந்த பெயருக்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?
விஜயகாந்த் ‘கேப்டன்’ என அழைக்கப்படுவது ஏன்? அடைமொழிக்கு பின்னால் இருக்கும் பெரிய கதை! title=

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர், விஜயகாந்த். சினிமாவைத்தாண்டி மக்கள் பணியிலும் ஆர்வம் காட்டிய இவர், தேமுதிக கட்சியின் தலைவராக விளங்கினார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், இன்று காலை உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது (Vijayakanth Death). இதை கேட்டதில் இருந்து ரசிகர்களும், தேமுதிக கட்சியின் தொண்டர்களும் மனமுடைந்து போயுள்ளனர். 

நடிகர் விஜயகாந்தை அனைவரும் ‘கேப்டன்’ என்று அழைப்பதுண்டு. இது, அவருக்கு பட்ட பெயராக அவரே சூட்டிக்கொண்டதல்ல. மக்களால் வைக்கப்பட்டது. இந்த பெயர் வந்தது எப்படி? ‘கேப்டன்’ என்ற பெயருக்கு பின்னால் உள்ள கதை என்ன? இங்கு பார்ப்போம். 

கேப்டன் பெயர் காரணம்..

தமிழ் திரையுலகிலேயே அதிக அளவில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான் என கூறப்படுகிறது. அதிலும், அப்படி இவர் காவல் அதிகாரி வேடமிட்டு நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவையாகவும், மாபெறும் ஹிட் அடித்த படங்களாகவும் உள்ளன. 1986ஆம் ஆண்டு வெளியான ஊமை விழிகள் படத்தில் ஆரம்பித்து, 2000ஆம் ஆண்டு வெளியான வல்லரசு படம் வரை காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் கலக்கியிருப்பார், விஜயகாந்த்

மேலும் படிக்க | RIP Vijayakanth: கறுப்பு நிறம்.. சிரித்த முகம்... கம்பீர நடை... கணீர் குரல்..! -ஓய்வெடுங்கள் கேப்டன்

விஜயகாந்தின் 100வது படம், ‘கேப்டன் பிரபாகரன்’. 1991ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்த், தமிழ்நாடு வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார். இவரது கதாப்பாத்திரம், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரும் தமிழ் ஈழ போராளியுமான வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து எழுதப்பட்டதாக கூறப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த், எப்போதும் போல சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். படமும், மாபெறும் ஹிட் அடித்தது. இந்த படத்தில் இருந்து நடிகர் விஜயகாந்திற்கு ‘கேப்டன்’ என்ற பெயர் மக்களால் கொடுக்கப்பட்டது (Captain Vijayakanth).  காவலதிகாரியாகவோ, இந்திய ராணுவத்தை சேர்ந்தவராகவோ இல்லாத ஒரு நடிகரை ஏன் அனைவரும் கேப்டனாக அழைக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் விஜயகாந்த் அரசியலில் ஆக்டிவாக இருந்த போது எழுப்பப்பட்டன. ஆனால், அவையனைத்தும் விஜயகாந்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவால் கண்டு கொள்ளப்படாமல் போயின. 

பிரபலங்கள்-அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

நடிகர் விஜயகாந்தின் உயிரிழப்பு, தமிழகத்திற்கே பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, ம.நீ.ம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இவரது மறைவிற்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உடல் நல்லடக்கம் செய்யப்படுவது எப்போது? 

நடிகர் விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் நல்லடக்கம் செய்ய அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அனுமதி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், நாளை மாலை 4:40 மணியளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. விஜயகாந்தின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Vijayakanth Unknown Facts : சம்பளம் வாங்காத நடிகர்..இயற்பெயர் வேறு..விஜயகாந்த் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News