Alanganallur Jallikattu 2023 Live: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு! `ஆட்டநாயகன் அபி சித்தர்`

Tue, 17 Jan 2023-5:39 pm,

Alanganallur Jallikattu 2023 Live Updates: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

Alanganallur Jallikattu 2023 Live Updates: பொங்கல் பண்டிகையின் நான்காவது நாள் மற்றும் கடைசி நாள், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை கண்ணு பொங்கல் என்றும் அழைகின்றனர். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணும் பொங்கல் கரிநாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்நாளில் மக்கள் சூரியக் கடவுளை வழிபட்டு உணவு மற்றும் சர்க்கரைப் பொங்கலை இடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கையில் இனிமை மற்றும் மகிழ்ச்சியைப் முன்னிலைப்படுத்த, தெய்வத்திற்கு கரும்பு அர்ப்பணிக்கப்படுகிறது. மேலும், அவரை தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடையே பரிமாறப்படுகிறது. காணும் பொங்கலின் போது, ​​மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் தொலைதூர உறவினர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 


மேலும், கடற்கரை, அருவி உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் சென்று தங்களின் அன்புக்குரியவர்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தை மேற்கொள்வார்கள். இதனால், இன்று பல்வேறு இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். 


குறிப்பாக, மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இன்று காலை 8 மணியளவில் உதயநிதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைப்பார் என கூறப்பட்டது. 


மதுரையின் மற்ற பகுதிகளான அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே நேற்று முன்தினம், நேற்று நடைபெற்றன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும், நேற்றைய ஜல்லிக்கட்டில் பாலமேடைச் சேர்ந்த அரவிந்த் ராஜ் என்பவர் காளை முட்டியதில் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். அதேபோல திருச்சி சூரியூரில் பார்வையாளர் அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் உயிரிழந்தார். 


காணும் பொங்கல் கொண்டாட்டம், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்த உடனடி செய்திகளை இங்கு காணலாம்.   

Latest Updates

  • இருவருக்கு பைக் பரிசு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2-ம் இடம் பிடித்த அஜய் (20 காளைகள்) மற்றும் 3-ம் இடம் பிடித்த ரஞ்சித் (12 காளைகள்) இருவருக்கும் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 

  • மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு கார் பரிசு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அபி சித்தருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் சார்பில் கார் பரிசு.

  • அனைத்து காளைகளுக்கும் தங்க காசு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடாத காளைகள் அனைத்துக்கும் தங்க காசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

  • 'ஆட்டநாயகன்கள் அபி சித்தர்'

    உலகப்புகழ் பெற்ற நம் பாரம்பரிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
    முதலிடம் அபி சித்தர் (26 காளைகள்)
    இராண்டாம் இடம் (20 காளைகள்)
    மூன்றாம் இடம் (12 காளைகள்)

  • 2 ஜல்லிக்கட்டு காளைகளும் உயிரிழப்பு

    வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டில் பங்கேற்று விட்டு லாரியில் ஊர் திரும்பும் போது புதுக்கோட்டை திருவரங்குளம் அருகே விபத்து. அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் இருவர் மற்றும் 2 ஜல்லிக்கட்டு காளைகளும் உயிரிழப்பு.

  • ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிதிஉதவி

    மதுரை பாலமேடு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

  • இறுதிச்சுற்று தொடங்கியது

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் 10வது மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் தொடங்கியது.

  • கம்பீரமாக களத்தில் நின்ற காளை:

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், தனது மாட்டை பிடித்தால் ரூ. 1 லட்சம் ரூபாய் பரிசு என அறிவித்த காளை உரிமையாளர். காளையை வீரர்கள் யாரும் அடக்காத நிலையில் காளை வெற்றி பெற்றது என அறிவிப்பு.

  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; வீரம் நிறைந்த மண் -நடிகர் சூரி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    உலகப்புகழ் பெற்ற நம் பாரம்பரிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மற்ற மதிப்பிற்குரிய அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் கண்டுகளித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி! வீரம் நிறைந்த மண் என நடிகர் சூரி பதிவிட்டுள்ளார்.

     

  • நன்றி கூறிய உதயநிதி ஸ்டாலின்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மிகச்சிறப்பாக ஒருங்கிணைந்தவர்களுக்கு நன்றி கூறிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

     

  • போலீசார் தடியடி

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேலரியில் ஏறுவதற்காக பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதால், சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • தங்க மோதிரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த தங்க மோதிரம் அலங்காநல்லூர் மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும்.

  • மாடுபிடி வீரர் அபிசித்தர் காயம்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை பிடித்து முதலிடத்தில் இருந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் காயம். போலீசார் கொண்டு வந்த வேன் மோதியதில் அபிசித்தர் காயம்.

  • மஞ்சுவிரட்டு:

    புதுக்கோட்டை மாவட்டம் கே.ராயவரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில், கணேசன் என்ற நபர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  • அமைச்சர் செந்தில் பாலாஜி

    ஜல்லிக்கட்டு செந்தில் பாலாஜி காளைகள் வெற்றி. 

  • Alanganallur Jallikattu 2023 Live ஏழாவது சுற்று முடிவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    காளைகளின் எண்ணிக்கை - 565

    மாடுபிடி வீரர்கள் - 525

    காயம் அடைந்தவர்கள் - 25

    அடுத்த சுற்றுக்கு தேர்வான வீரர்கள் - 7

  • ஜல்லிக்கட்டில் பார்வையாளர் உயிரிழப்பு

    புதுக்கோட்டை கே. ராயவரத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளரை மாடு முட்டியது. அவர் சிகிச்சை பலனின்றி உய்ர் இழந்ததாக தகவல் வந்துள்ளது

  • ஜல்லிக்கட்டில் அமைச்சர் உதயநிதி

    தமிழகத்தில் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு முழு முனைப்புடன் நடந்துவருகின்றது. இதற்கிடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தார் நடிகர் சூரி.

  • Alanganallur Jallikattu 2023 Live ஆறாவது சுற்று முடிவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    26 பேருக்கு காயம். அதில் 3 பேருக்கு பலத்த காயம்

    மாட்டின் உரிமையாளர்கள் 9 பேருக்கு காயம் 

    13 மாடு பிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.  

    3 பார்வையாளர்களுக்கு காயம்

    21 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    16 காளைகளை அடக்கி அஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

    9 காளைகளை அடக்கி ரஞ்சித் மூன்றாம் இடத்தில் உள்ளார்.  

  • Kanum Pongal 2023 Live மெரினாவில் குளிக்க தடை

    காணும் பொங்கல் நாளில் அதிக கூட்டம் மெரினா கடற்கரையில் கூடும் என்பதால் கடற்கரையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது

  • Alaganallur Jallikattu 2023 Live 5ஆம் சுற்று நிறைவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஐந்தாம் சுற்று நிறைவடைந்த நிலையில், ஆறாம் சுற்று தொடங்கியது. இந்த ஐந்து சுற்றுகளிலும் ஒட்டுமொத்தமாக 22 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

    இதுவரை 

    16 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    319 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 

    அபி சித்தர் 17 காளைகளை அடக்கி முதலிடம் வகிக்கிறார்.  

    அஜய் 11 காளைகளை அடக்கி இரண்டாமிடத்தில் உள்ளார். 

    ரஞ்சித் 8 காளைகளை அடக்கி மூன்றாமிடத்தில் உள்ளார். 

     

     

     

  • Alanganallur Jallikattu 2023 Live வாடிவாசல் அருகே தடியடி

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு வாடிவாசல் அருகே பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் இந்த கேலரியில் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கேலரியில் ஏறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் வெளி மாநில,மற்றும் சுற்றுலா பார்வையாளர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் ஏராளமான நபர்கள் காயமடைந்தனர்.

  • Alanganallur Jallikattu 2023 Live உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையா? 

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடு பிடி வீரர் அரவிந்த் ராஜ், சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளரான அரவிந்த் ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவின்போது உதயநிதி தெரிவித்துள்ளார். முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது. 

  • Alanganallur Jallikattu 2023 Live  மூன்றாம் சுற்று நிறைவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் மூன்றாம் சுற்று நிறைவுபெற்றது. நான்காம் சுற்று தொடங்கியது.

    இதுவரை

    கோபாலகிருஷ்ணன் என்பவர் 7 மாடுகளை அடக்கி முதலிடம். 

    தவமணி, அபிசித்தர் ஆகியோர் தலா 4 மாடுகளை அடக்கி இரண்டாமிடம். 

    காயமடைந்தோர் எண்ணிக்கை - 11 பேர் 

    காயமடைந்த வீரர்கள் எண்ணிக்கை - 5 பேர் 

    காயமடைந்த மாட்டின் உரிமையாளர் எண்ணிக்கை - 5 பேர் 

    காயமடைந்த பார்வையாளர் எண்ணிக்கை - 1

  • Alanganallur Jallikattu 2023 Live பொழியும் தங்க மழை 

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் ஒவ்வொரு வீரருக்கும், காளைகளுக்கும் ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகங்கள் பதிக்கப்பட்டுள்ளது. 

  • Jallikattu 2023 Live பாலமேடு ஜல்லிக்கட்டில் எத்தனை பேருக்கு காயம்?

    நேற்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் ராஜா தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார். 

  • Alanganallur Jallikattu 2023 Live தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கிவைத்தார். 

    அவருக்கு அலங்காநல்லூர் ஊர் சார்பாக மரியாதை செய்யப்பட்டது. 

    அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்பு. 

    முதலில் கோயில் மாடுகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. 

  • Pudhukottai Jallikattu 2023 Live புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி வன்னியன் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது.

  • Alanganallur Jallikattu 2023 Live ஏராளமான பரிசுகள் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் இடத்தை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் சார்பிலும்,  சிறந்த காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது

    போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளைகள், மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. 

    இதேபோன்று போட்டியின் போது சிறப்பாக விளையாடக்கூடிய காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பைக், ப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி போன்ற பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

  • Alanganallur Jallikattu 2023 Live பலத்த பாதுகாப்பு 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    போட்டியில் காளைகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரிய மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் இணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    போட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • Alanganallur Jallikattu 2023 Live காவல்துறை எச்சரிக்கை

    போட்டியில் கலந்துகொள்ள போலியான ஆவணங்களை பயன்படுத்தி காளை உரிமையாளரோ, மாடுபிடி வீரர்களோ கலந்துகொண்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

  • Alanganallur Jallikattu 2023 Live இன்னும் சற்று நேரத்தில் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. 

    இப்போட்டிக்கு 1000 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் தலா 25 முதல் 40 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு 10 சுற்றுகளாக போட்டி நடைபெற உள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link