Palamedu Jallikattu 2023: சோகத்தில் வாடிவாசல்... காளை தாக்கியதில் பலியான நட்சத்திர வீரர்

Palamedu Jallikattu: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் நட்சத்திர வீரராக விளங்கிய அரவிந்த் ராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 16, 2023, 06:22 PM IST
  • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
  • இதில், காயமடைந்த அரவிந்த் ராஜ் 9 காளைகளை அடக்கியுள்ளார்.
  • காயமடைந்ததை அடுத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.
Palamedu Jallikattu 2023: சோகத்தில் வாடிவாசல்... காளை தாக்கியதில் பலியான நட்சத்திர வீரர் title=

Palamedu Jallikattu: மதுரை பாலமேடு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - தெய்வானை தம்பதிக்கு இரண்டு மகன்கள். இவர்களின் முதல் மகன் நரேந்திர ராஜ். சென்னையில் தந்தை ராஜேந்திரனுடன் கட்டட வேலை பார்த்து வருகிறார். இரண்டாவது மகனான அரவிந்தராஜ் (24) கட்டட வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஜல்லிக்கட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பீரோ, ஹெல்மெட், தங்கக்காசு உள்ளிட்ட பல பரிசுகளை வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், இன்று மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. 

மேலும் படிக்க | Maattu Pongal: தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்ட மாட்டுப் பொங்கல் 2023

ஒவ்வொரு சுற்றுக்களாக வீரர்கள் களமிறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. இப்போட்டியில் மதுரை அரவிந்த் ராஜன் காளைகளை அடக்கி வந்தார். இவர் ஆடுகளத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்பட்டதோடு 9 காளைகளை பிடித்து வெற்றி வரிசையில் 3ஆவது இடத்தில் இருந்தார். 

இந்த நிலையில் பாய்ந்து வந்த காளை ஒன்றை மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் அடக்க பாய்ந்தார். அப்போது அவரது மார்பு பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி கிழித்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அரவிந்த் ராஜன் வாடிவாசலில் சரிந்து விழுந்தார். இதனை தொடர்ந்து அவரை மருத்துவ குழுவினர் பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி வழங்கினர். 

அப்போது அரவிந்த் ராஜன் மூச்சு விட சிரமப்பட்டார். உடனே அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த் ராஜன் உயிரிழந்தார். மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தன் சொந்த ஊரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று ஒன்பது காளைகளை அடக்கி அரவிந்த் ராஜன் உயிரிழந்த சம்பவம் பாலமேட்டையே உலுக்கி உள்ளது.

மேலும் படிக்க | Mattu Pongal Festival 2023 Live: பாலமேடு ஜல்லிக்கட்டு - நட்சத்திர வீரர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News