TN Rain Live Update: 65KM வேகத்தில் காற்று வீசக்கூடும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த வாரம் தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்த மழையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சென்னை வாசிகள், நேற்று மீண்டும் பெய்த கனமழையால் தவிக்கின்றனர்.
Latest Updates
வெப்பநிலை நிலவரம்:
மாலை 5.30 மணியளவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை நிலவரங்கள்!விடுமுறை:
தொடர் கனமழை காரணமாக விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு.மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய கனமழை:
தமிழகத்தின் திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்ச வெப்பநிலை நிலவரம்:
காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ( °C) மற்றும் இயல்பிலிருந்து அதன் விலகல் (°C).நாளையும் விடுமுறை:
தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும்:
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு 250 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.நாளை அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும்.காற்றழுத்த தாழ்வு மணடலம் நாளை காலை கரையை கடக்கும்: IMD
இன்று காலை 8:30 மணியளவில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில், சென்னைக்கு 310 கி.மீ. தொலைவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழைக்காலத்தில் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் மக்களே!!
மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு காலங்களில் பொது மக்கள் அதிக எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். அரசு சார்பில் அவ்வப்போது வெளியிடப்படும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது நல்லது. மழைக்காலத்தில் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் இதோ.
சென்னையிலிருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
சென்னையிலிருந்து 340கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புதுச்சேரி இருந்து 300கி.மீட்டர் தூரத்தில் கிழக்கு, தென்கிழக்கு திசையில் வங்க கடலில் மையம் கொண்டுள்ளது. இன்னும் 12மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் போது காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும்- வானிலை மையம் அறிவிப்பு.
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளது என்றும் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: பல இடங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் மீண்டும் மழை!! தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து, இன்று வட தமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதி இடையே செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல தமிழக மாவட்டங்களில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால், இந்த பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.