Mattu Pongal Festival 2023 Live: பாலமேடு, சூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு - இருவர் உயிரிழப்பு

Mon, 16 Jan 2023-5:04 pm,

Mattu Pongal Festival 2023 Live: மாட்டு பொங்கல் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

Mattu Pongal Festival 2023 Live Updates: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல் திருநாளான நேற்று உழவுக்கு மிக முக்கியமான சூரியனை அனைவரும் வணங்குவர். சூரியன் முன்னிலையில் பொங்கலிட்டு, காய்கறி, கிழங்கு வகைகளை சமைத்து படையலிட்டு விவசாயம் செழிக்க வேண்டிக்கொள்வார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து, உழவுக்கு பேருதவியாக இருக்கும் மாடுகளை வணங்கும் திருநாள் தான் மாட்டு பொங்கல். இந்த பண்டிகையையொட்டி, வீடுகளில் உள்ள மாடுகளை நீராட வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் அடித்து, மாடுகள் முன் பொங்கலிட்டு அதனை வணங்குவார்கள். ஆண்டுதோறும் உழைப்பைக் கொட்டும் அந்த மாடுகளை போற்றும் வகையில், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 


மேலும், பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரையில் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. நேற்று அவனியாபுரத்தில் சிறப்பான வகையில், ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. மாட்டு பொங்கல் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு குறித்த உடனடி தகவல்களை இங்கு காணலாம். 

Latest Updates

  • Jallikattu 2023: சூரியூர் ஜல்லிக்கட்டு - நிறைவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    623 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 

    17 காளைகளை அடக்கிய பூபாலன் முதல் பரிசான இருசக்கர வாகனத்தை வென்றார்.  

    14 காளைகளை அடக்கிய ரஞ்சித் இரண்டாம் பரிசான தங்க காசை வென்றார்.  

    61 பேர் மொத்தம் காயமடைந்தனர்.  

  • Palamedu Jallikattu 2023 Live பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    காலை 8 மணிக்கு தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது. இன்றைய போட்டி குறித்த சிறு பார்வை:

    860 காளைகள் இன்று அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 

    23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 

    19 காளைகளை அடக்கிய மணிகண்டனுக்கு இருச்சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

    15 காளைகளை அடக்கிய ராஜா என்பவர் மூன்றாவது பரிசை வென்றார். 

    நெல்லை பொன்னர் சுவாமி கோயில் காளை சிறந்த காளைக்கான பரிசை வென்றது. உரிமையாளருக்கு இருச்சக்கர வாகனம் வழங்கப்பட்டது. 

  • Jallikattu 2023 Live சூரியூர் ஜல்லிக்கட்டு - இதுவரை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் - 468.

    படுகாயமடைந்தோர் எண்ணிக்கை - 49

    படுகாயமடைந்த மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை - 5

    படுகாயமடைந்த மாடு உரிமையாளர்கள் எண்ணிக்கை - 12 

    படுகாயமடைந்த பார்வையாளர்கள் - 31 பேர்.

  • Palamedu Jallikattu 2023 Live 7ஆம் சுற்று நிறைவு

    பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 771 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 8ஆம் சுற்று நடைபெற்று வருகிறது. 

  • Jallikattu 2023 Live திருச்சி ஜல்லிக்கட்டில் பார்வையாளர் பலி

    திருச்சி சூரியூர் பகுதியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், பார்வையாளராக இருந்த அரவிந்த என்பவவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

  • Palamedu Jallikattu 2023 Live நட்சத்திர வீரர் உயிரிழப்பு

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் சிகிச்சை பலனின்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

  • Palamedu Jallikattu 2023 Live நட்சத்திர மாடு பிடி வீரருக்கு படுகாயம்

    பாலமேடு ஜல்லிக்கட்டு 9 காளைகளை அடக்கிய சிறப்பாக செயல்பட்டு வந்த அரவிந்த் ராஜ் என்பவரை மாடு தாக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

  • Palamedu Jallikattu 2023 Live 13 பேர் காயம்

    காளைகள் சேகரிக்கும் இடத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த நாகமலை புதுக்கோட்டை பகுதி காவல் ஆய்வாளர் சிவக்குமாரை காளை மாடு முட்டியதில் தலையில் காயம் ஏற்பட்டது. தற்போது வரை, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 10 பேர் லேசான காயத்துடன் பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூன்று மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  • விருதுகளை வழங்கிய முதலமைச்சர்

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த விழாவில் தமிழறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

  • Jallikattu 2023 Live அவனியாபுரம் - காயமடைந்தோர் விவரம்

    பாலமேடு ஜல்லிக்கட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் காயமடைந்தோர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், மொத்தம் 60 மாடு பிடி வீரர்கள் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்ட்டது.  

  • Palamedu Jallikattu 2023 Live ஜல்லிக்கட்டில் துணிவு பட வில்லன் 

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் ஜான் கொக்கேன், மனைவி பூஜாவுடன் கலந்துகொண்டார். இவர் சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

  • Mattu Pongal Festival 2023 Live மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்

    திருவள்ளூவர் தினம் தமிழ்நாட்டில் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது புது சர்சையை கிளப்பியுள்ளார். வள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படத்தை அவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்

  • Mattu Pongal 2024 Live மாட்டு பொங்கலில் மீன் விற்பனை அமோகம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நாகை மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்களால் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஏராளமான மீன் பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

     

  • Palamedu Jallikattu 2023 Live முதல் சுற்றில் 92 காளைகள் 

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்து, இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் 92 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 

  • இளைஞர் காயம்
    பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் காளையை அடக்கியவர் காயமடைந்தார். அவருக்கு பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  • மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு

  • இதுவரை 22 காளைகளுக்கு அனுமதி
    காலை 8 மணி நிலவரப்படி 22 காளைகளுக்கு பரிசோதனை முடிந்து வாடிவாசலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Palamedu Jallikattu 2023 Live முதல் சுற்றில் கோவில் காளைகள் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக கிராம காளைகள் வாடிவாசல் பகுதிக்கு அழைத்துவரப்பட்டது. 

    முதல் சுற்றில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் வருகை தந்த நிலையில் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கியது. 

    முதலில் கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்படும் அதனை யாரும் பிடிக்கமாட்டார்கள். 

    அதனை தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ளவுள்ள காளைகள் அவிழ்க்கப்பட உள்ளது.

  • Palamedu Jallikattu 2023 Live இன்னும் சற்று நேரத்தில்

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் வீரர்களின் உறுதிமொழியுடன் தொடங்கப்பட உள்ளது.  இதில், 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்க உள்ளன

  • Palamedu Jallikattu 2023 Live ஆன்லைனில் முன்பதிவு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காளைகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, QR-Code, புகைப்படம், ஆதார் எண் அடங்கிய அனுமதி அட்டை விநியோகிக்கப்படும்.

    காளைகளின் உயரம், கொம்பு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யும் இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெறும்.

    இந்த ஆண்டு காளைகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. 

  • Palamedu Jallikattu 2023 Live பாலமேட்டில் மருத்துவக் குழு 

    இந்த போட்டிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 160 பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும், 6 மொபைல் மருத்துவக்குழுவினர், 15 108 ஆம்புலன்ஸ்கள், 60 பேர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினரும், கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

  • Palamedu Jallikattu 2023 Live ஜல்லிக்கட்டு விதிமுறைகள்

    போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் 25 மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள். ஒரு சுற்று 45 நிமிடங்கள் வரை நீடிக்கும். களத்தில் மாடுபிடி வீரர்கள் மாட்டை பிடித்துக் கொண்டே 50 மீட்டர் தூரம் செல்ல வேண்டும். வால் மற்றும் கால்களை பிடிக்கக் கூடாது. இப்படி சரியாக காளையை பிடிப்பவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்கள். காளையை யாரும் பிடிக்காமல் காளை தப்பி சென்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

  • Palamedu Jallikattu 2023 Live பாலமேட்டில் பலத்த பாதுகாப்பு

    மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உடன், காளைகள், மாடு பிடி வீரர்கள் என அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கிப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கட்டுப்பாடுகள் மிக கடுமையாக பின்பற்றப்பட்டன. தற்போது பாலமேட்டில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link