Tamil Nadu Budget 2022 Live: பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Fri, 18 Mar 2022-12:50 pm,

தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த வருடம் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்தார். 


இந்நிலையில் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இன்று பட்ஜெட் ஜார்ஜ் கோட்டையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

Latest Updates

  • ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் குறித்த பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் வெளியிடப்பட்டன.

    - தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.

    - ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

     

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முழுமையான தகவல்களை குறித்து இங்கே காணலாம். 

     

  • நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல்

  • பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர்

  • கடந்த அரசு விட்டு சென்ற நெருக்கடியான நிதிநிலை காரணமாக இந்த ஆண்டே அதனை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

  • மகளிருக்கான உரிமைத் தொகை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

  • வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி 

  • அரசு பள்ளிகள் நவீனப்படுத்தப்படும் என அறிவிப்பு

  • ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும் 

     

  • தமிழக பட்ஜெட் உலகளவில் சென்றடைய வசதியாக சில பத்திகளை ஆங்கிலத்தில் வாசித்தார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

    உலகளவில் தொழில்களை ஈர்க்க இது உதவும் என விளக்கம் அளித்தார்.

  • வருமாண்டில் இதுவரை இல்லாத அளவு ஊழல் தடுப்பு பணிகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

  • மனித வள சீர்திருத்த குழு அமைக்கப்படும்

  • அரசு சொத்துகளை முறையாக கணக்கிட்டு அவற்றை சேகரித்து கண்காணிக்க சொத்து மேளாண்மை மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும்.

  • 327 முன்கள பணியாளர்களுக்கு 79.50 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

  • 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து தரம் உயர்த்தப்படும். இவற்றிற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • தமிழ்நாடு பண்பாடு, தொன்மை மேம்படுத்த தொகுப்பு சுற்றுலா பயணம் மேம்படுத்தப்படும்.

  • பிளாக்-செயின் போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அரசு நன்கு அறிந்துள்ளது. இதனை மேம்படுத்த 190 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

  • தோல் அல்லாத காலணிகள் தோல் சார்ந்த வேலைவாய்ப்பை உருவாகின்றன தொடைகளை மேலும் வளர்க்கும் வண்ணம் புதிய காலனி தொழில் கொள்கை வெளியிடப்படும்

  • தமிழ்நாடு கயிறு தொழில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது, 

    உள்நாட்டு , வெளிநாட்டு ஏற்றுமதியில் மதிப்பீட்டு பொருட்களை பிரபலப்படுத்த கோவையில் 5கோடி செலவில் மையம் அமைக்கப்படும்

  • கடந்த ஆண்டு மின்சாரத்துறை சந்தித்த 13,300 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசே ஏற்கும்...

  • மகளிருக்கு இலவச பயணத்திட்டத்தால் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்காக 1560 கோடி ரூபாய் ஒதுக்கீடு..

  • பிரதமர் மாதிரி வீட்டு வாரிய திட்டத்திற்கு 3200 கோடி ஒதுக்கீடு

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 1000 கோடி ஒதுக்கீடு

    சிங்கார சென்னை திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கீடு

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 1000 கோடி ஒதுக்கீடு

     

  • சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • புதிய உருவாக்கப்பட்ட28  நகராட்சிகளுக்கு தலா 2கோடி வீதம் 56 கோடி ஒதுக்கீடு

  • நகர்புறத்தை பசுமைப்படுத்த 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்

  • தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு

  • பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தூ முப்பதாயிரம் புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது நான்கி ஆயிரத்து 830 கோடி ஒதுக்கீடு

  • ஊரக வள்ர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறைக்கு 26.647.19 கோடி ஒதுக்கீடு

  • பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்

  • தேவாலயம், தர்காக்களை சீரமைக்க சிறுபான்மை நலத்துறைக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் சமூக பொருளாதார முன்னேற்ற முன்னேற்றம் அடைய மனம் வாழ்வாதார திட்டங்களை ஆய்வு செய்து மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு மறு சீரமைக்கப்படும்

  • மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க 1062 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

  • அரசுப் பள்ளியில் படிக்கும் பெண்கள் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

     

  • உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு மருத்துவக் கல்வியை தொடர முடியாமல் தாயகம் திரும்பியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்வியை தொடர அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்

  • 150 ஆண்டுகளை சேர்ந்த 2000 சதுரங்க விளையாட்டு வீரர்கள் சென்னை சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது தமிழக விளையாட்டுத்துறையில் திருப்புமுனையாக அமையும்.

  • வடசென்னையில் இளைஞர்களின் திறனை ஊக்குவிக்க விளையாட்டு வளாகம் உருவாக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் ராதாகிருஷ்ணன் நகரில் அமைக்கப்படுகிறது

  • இந்திய தொழில் நுட்ப கழகம், மருத்துவ கல்வி இயக்கம் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க 6 முதல் 12 மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும்

  • தமிழ்நாடு ஒலிம்பிக் தேடல் திட்டத்திற்கு ₹25 கோடி ஒதுக்கீடு

  • இந்திய தொழில் நுட்ப கழகம், மருத்துவ கல்வி இயக்கம் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க 6 முதல் 12 மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்கும்

  • ஆண்டுக்கு 5 லட்சம் இளைஞர் ஊக்குவிக்க நான் முதல்வன் திட்டம்

  • பள்ளிகல்வி துறைக்கு தமிழக பட்ஜெட்டில் 36,895.89 கோடி ஒதுக்கீடு

  • அறிவுசார் நகரம் உருவாக்கப்படுகிறது. உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழக கிளைகளை கொண்டிருக்கும். இந்த நகரில் ஆராய்ச்சிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்

  • சென்னை போல அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சி நடத்தப்படும். ஆண்டுக்கு 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும்.

  • புத்தக வாசிப்பு மக்கள் இயக்கமாக மாற்ற புத்தக வாசிப்பு திருவிழா நடத்தப்படும்

  • அரசு பள்ளிகளை மேம்ப்படுத்துவதற்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும்

  • அனைத்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தை அரசு செயல்படுத்தும். அரசுப் பள்ளிகளில் 18000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். ஸ்மார்ட் கிளாஸ்ரூம், கண்ணி வசதி ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளில் 7000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

  • கொரோனாவால் கல்வி கற்றலில் இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இல்லம் தேடிக் கல்வி இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.

     

  • 'வரையாடு' பாதுகாப்பு திட்டத்திற்கு ₹10 கோடி ஒதுக்கீடு. தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு 7338.36 கோடி ஒதுக்கீடு

  • சாத்தனூர், மேட்டூர் உள்ளிட்ட 64 பெரிய அணைகளை புனரமைக்க 1064 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • சென்னை கிண்டி குழந்தைகள் பூங்காவை பறவைகள், விலங்குகள் அடங்கிய இயற்கை பூங்காவாக மாற்றிட அரசு முடிவு செய்துள்ளது.

  • சுய உதவிகளுக்கான கடன், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ₹4130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • சமூக ஊடக மையம் அமைக்கப்படும்
    சமூக ஊடகங்களில் செய்யப்படும் தவறான பிரசாரங்களால் ஏற்படும் தவறுளை தடுக்க சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்

  • தீயணைப்பு மீட்பு பணிகளை நவீன மையமாக்க நடவடிக்கை

  • வானிலை மேம்பாட்டு பணிக்கு 10கோடி ஒதுக்கீடு

  • இதுவரை என்னென்ன அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன என்பதை அறிந்துக்கொள்ள எங்களுடன் தொடர்ந்து (Budget LIVE Updates) இணைந்திருங்கள்!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதன் மூலம் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.

  • முதியோர் ஓய்வு திட்டம், மாற்று திறனாளி திட்டங்களுக்கு 4816 கோடி ஒதுக்கீடு

  • சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • அரசு நிலங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ₹50 கோடி ஒதுக்கீடு
    அரசு நிலங்களை மீட்டெடுக்கவும் பாதுகாத்து பராமரிக்கவும் ஆக்கிரமிப்பில் இருந்து தடுக்கவும் 50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

  • ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ள ஜிஎஸ்டி தொகையால் இந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

  • அரும் பொருட்களை பாதுகாக்க விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி மதிப்பில் புதிய அரசு அருங்காட்சியகங்கள்

  • கீழடி, சிவகளைம், கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    பாண்டியர்களின் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

  • பெரியாரின் எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்து செல்ல பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் அச்சு மற்றும் டிஜிட்டல் வழியில் வெளியிடப்படும். இதற்காக 5 கோடி ஒதுக்கீடு

  • உக்ரைன் ரஷ்யா போரின் தாக்கம்:
    தற்போதிருக்கும் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக மாநில பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடும். வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நிதியமைச்சர் கூறினார். 

  • கொரோனா காரணமாக மாநிலங்களில் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஒன்றிய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.

  • தமிழக அரசு வாக்குறுதிகளை முதல் நாளிலிருந்தே நிறைவேற்றி வருகிறது என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
    2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை தொடங்கி வைத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழகம் எவ்வளவு நிதி நெருக்கடியை எதிர்கொண்டாலும், திமுக அரசு முதல் நாளிலிருந்தே வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.

  • முதல்வரின் முகவரி துறையின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகாரின் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

  • பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவு செய்து மக்கள் நல அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

  • இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை

  • 8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது. உக்ரைன்  ரஷ்யா போர் காரணமாக வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. வட்டி விகிதம், பணவீக்கம் அதிகரிக்கும்.

  • ’இந்தியா’ மாநிலங்களின் ஒன்றியம் என்பதே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. இந்த கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வருத்தத்தை அளிக்கிறது.

    கலைஞர் வழியில் மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும்

  • அன்மையில் தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் பண்டையதமிழ் நாகரிகம் 3200 ஆண்டுகள் பழமையானது என்பதை பறைசாற்றுகிறது.

  • 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு அதனை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறையவுள்ளது.

  • அதிமுக வெளிநடப்பு

  • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் இவ்வாறு செய்வது நல்லதல்ல என்றும் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலை
    இன்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் பட்ஜெட் உரையை இங்கே பார்க்கலாம்.

  • முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் ரைடு குறித்து பேச அதிமுக அமளி

  • முதல் அலையை விட 5 மடங்கு அதிக வீரியத்துடன் கொரோனா பரவிய காலத்தில் நாங்கள் பதவியேற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்

  • எதிர்கட்சி சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு

  • கடந்த  நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன

  • பட்ஜெட் உரையை பழனிவேல் தியாகராஜன் வாசிக்க ஆரம்பித்த உடன் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்

  • அதிமுகவினர் அமளி
    நிதி மற்றும் மனிதவள மேளாண்மைத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை படிக்கத் தொடங்கினார்

  • தமிழக சட்டபேரவை கூட்டம் துவங்கியது
    திமுக அரசின் முதல் முழு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. 2 ஆண்டுகளுக்கு பின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடைபெறுகிறது.

  • தமிழக பட்ஜெட்டில் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படும்
    தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநில வருவாயை உயர்த்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள், கடன் சுமையை குறைக்க, எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பெண்களுக்கு மாதாந்திர ரொக்கமாக ரூ 1,000 வழங்குவதும் இதில் அடங்கும்.

  • 10 மாத உழைப்பின் பலன் பட்ஜெட்டில் தெரியும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் வியாழக்கிழமை பேசுகையில், “10 மாத உழைப்பின் முடிவுகளை நாளைய பட்ஜெட்டில் காணலாம் என்றார்.

  • 2022 - 2023 மானிய கோரிக்கை மார்ச் 24 ஆம் தேதி தொடங்கும்
    2022 - 2023 மானிய கோரிக்கை மார்ச் 24 ஆம் தேதி தொடங்கும். கொரோனா விதிகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். 

  • அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒபிஎஸ் இபிஎஸ் ஆலோசனை
    முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத உள்ளிட்ட காரணங்களுக்காக பட்ஜெட்டை புறக்கணிக்க அதிமுக திட்டம் என தகவல்.

     

  • திமுக அரசு தனது இரண்டாவது மின்பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது
    திமுக அரசு இன்று இரண்டாவது முறையாக மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

  • திராவிடன் மாடல் பட்ஜெட்:
    தமிழக அரசின் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப் பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரண்டாவது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனைவரின் கவனம் முழுவதும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் திராவிடன் மாடல் பட்ஜெட் மீது உள்ளது.

  • தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்
    தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார்.

  • தமிழ்நாடு சட்டப்பேரவையின் - பட்ஜெட் கூட்டத்தொடர் - 2022 - 23 நேரலையில் காண இங்கே பார்க்கவும்.

  • இன்று மின்சார கட்டணத்தில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  • இன்றைய தமிழக பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link