Live Update: 2022 ஜூன் 06 இன்றைய முக்கிய செய்திகள்

Mon, 06 Jun 2022-6:55 am,

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 06.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

 


Latest Updates

  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கமல்ஹாசன் தன் கைப்பட கடிதம் எழுதி உள்ளார் 

     

  • போக்குவரத்து துறையில் மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது அதிமுக அரசு தான் தற்பொழுது ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கு அதிமுக ஆட்சியை காரணம்

    கடந்த ஆட்சியில் நிர்வாக சிக்கல் காரணமாக போக்குவரத்து துறையில் 48500 கோடி கடன் உள்ளது இந்த பிரச்சனை தமிழக முதலமைச்சர் விரைவில் சரி செய்வார் போக்குவரத்துறை அமைச்சர் தகவல்

  • இந்தியா உதவி செய்யாவிட்டால் இலங்கை திவாலாகியிருக்கும் – இந்திய அரசாங்கத்திற்கும், தமிழக முதலமைச்சருக்கும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் நன்றிகள் தெரிவிப்பு

  • நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்:

     

  • அமைச்சே சேகர்பாபு பதிலடி:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஏதோ ஒரு ஆதினத்தின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என மதுரை ஆதினத்துக்கு சேகர்பாபு பதிலடி!

  • இந்தியா உதவி செய்யாவிட்டால் இலங்கை திவாலாகியிருக்கும்: பழனி திகாம்பரம் நன்றி

    இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை உதவிகளாக வழங்கியதிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

  • வ.உ. சிதம்பரனார் உருவச்சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சி நகரும் பேருந்தை கனிமொழி கருணாநிதி எம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார். வ.உ.சி வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு, பேருந்தில் வைக்கப்பட்டுள்ள வ.உ. சிதம்பரனார் உருவச்சிலைக்கு கனிமொழி கருணாநிதி எம்பி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  • 5 ஆயிரம் பேர் வேலைநிறுத்த போராட்டம்:

    நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 406 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம். கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 27.062022 முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

  • நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே கனரக லாரி டயர் ஒன்று  கழன்று சாலையில் தரிக்கெட்டு ஓடி சாலையோரம் நடந்துச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், ஆட்டோ ஓட்டுனர்  சிகிச்சை பலனின்றி பரிதாப பலி. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு.

  • நளினி வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்:

    ஆளுனரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

  • சீமான் வேதனை: 

    கெடிலம் நதியில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தது பெருந்துயரம்! குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை

  • தேமுதிக தலைவர்  விஜயகாந்த் இரங்கல்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தேமுதிக நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் - கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

  • பணியிடங்கள் நிரப்புவல் சமூகநீதியை மறுப்பதா? பாட்டாளி மக்கள் கட்சி கேள்வி:

    சென்னை ஐஐடி மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டிகள், ஐ.ஐ.எம்களிலும் சமூகநீதி  தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் இப்போது நிரப்பப்படாத 25 பணியிடங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த பின்னடைவு பணியிடங்களும் அடையாளம் காணப்பட வேண்டும். அதே போல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு, அவை அனைத்தையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பேருந்து பயணத்தில் இதற்கெல்லாம் தடை: தமிழ்நாடு அரசு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பேசவும், பாடல்கள் கேட்கவும், வீடியோ கேம் விளையாடவும் தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இனிமேல் பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பிற பயணிகளுக்கு தொல்லை ஏற்படுத்தினால் பயணியைப் பேருத்திலிருது இறக்கிவிடவும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  • ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண் தற்கொலை: நடந்தது என்ன?

    20 சவரன் நகையை விற்று ஆன்லைன் ரம்மி விளையாடிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பவானியின் மரணம் குறித்து காவலர்கள் மெற்கொண்ட விசாரணையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த பவானி, தனது 20 சவரன் தங்க நகைகளை விற்றும், சகோதரிகளிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நகை, பணத்தை இழந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. பவானிக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 9 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    2021-22 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • திமுக அரசு அமைய தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலின் பொது தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாளை நடைபெறவுள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து தீட்சிதர்களிடம் அவர் எடுத்துரைத்தார். அதனை சட்டப்படி எதிர் கொள்வதாக தீட்சிதர்கள் தெரிவித்தனர். அனைவரும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து ஆலோசனை செய்து சுமூக தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம்: திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்

    சென்னையில், காமராசர் சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையகரத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது. தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையின் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

  • 2 நாள் பயணமாக நாளை மதுரை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை செல்கிறார். மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தின் கட்டுமான பணிகளை நாளை ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை வேங்கைப்பட்டியில் சமத்துவபுரத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். 

  • சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 2 பேர் பதவியேற்பு
    சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட சுந்தர் மோகன், குமரேஷ் பாபு பதவியேற்றுக் கொண்டனர். 

     

  • சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது
    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4,785-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
    பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  • 16 மாவட்டங்களில் கனமழை
    தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணஒரி, தர்மபுரி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, நாமக்கல்‌, கரூர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஒரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

  • ஜூன்-06 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  • ஈரோட்டில் தக்காளி கிலோ ரூ.40-க்கு விற்பனை
    தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விலையும் படிப்படியாக குறைந்தது. நேற்று சுமார் 15 டன் தக்காளி வரத்தானது. இதனால், தக்காளியின் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

  • சென்னை அண்ணாநகரில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்
    அண்ணாநகரைச் சேந்த தொழிலதிபர் கணேசன் என்பவரின் சொகுசு கார் பலத்த சத்தத்துடன்  வெடித்தது. காரின் உரிமையாளர் கணேசன் 60 சதவீதம் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link