Live Update: 2022 ஜூன் 25 இன்றைய முக்கிய செய்திகள்

Sat, 25 Jun 2022-8:05 am,

Live Update: 2022 ஜூன் 25 இன்றைய முக்கிய செய்திகள்

Latest Updates

  • அதிமுகவின் உட்கட்சி பூசலின் உச்சகட்ட நடவடிக்கைகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ”நமது அம்மா” நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம் 

    சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்திலிருந்து புரட்சி பயணத்தை வி கே சசிகலா துவங்கினார்.

    அனைவரையும் ஒன்றிணைத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதே சசிகலாவின் நோக்கம் என சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

  • சிவகங்கையில் சிறப்பு பல் மருத்துவ முகாம்

    சிவகங்கையில் வாய்ப் புற்றுநோயை கண்டறியும் சிறப்பு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. காரைக்குடியில் பிரபு டெண்டல் கிளினிக்கில் வாய்ப் புற்றுநோயை கண்டறியும் சிறப்பு பல் மருத்துவமுகாம் நடைபெற்றது.

  • இரட்டை இலை சின்னத்தை வாங்கியதே நாங்க தான் :  திண்டுக்கல்லில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

    திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனின் அலுவலகம், எம்ஜிஆர் சிலை பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளை சுற்றிலும் முதல் முதலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாயத்தேவரின் படத்தை போட்டு மாநில முக்குலத்தோர் இளைஞர் பாசறை சார்பில்   ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 
    இரட்டை இலை சின்னத்தை வாங்கியதே நாங்க தான் என திண்டுக்கல்லில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக எம்ஜிஆர் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருவதால் நகரில் கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தொடங்கிய காற்றுடன் கூடிய சாரல் மழை விடிய விடிய பெய்தது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் மேகமூட்டம் மற்றும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அலுவலகங்களுக்கு செல்பவர்களும், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • விநாயகா மிஷன் கல்லூரி  மாணவர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்ணா போராட்டம். 

    சேலம் 5 ரோடு அருகே மேம்பாலத்தில் நள்ளிரவில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பெற்றோர் மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில்  தர்ணா போராட்டம். விபத்துக்கு காரணமான சொகுசு காரில் வந்த தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது மது போதையில் வந்து விபத்து ஏற்படுத்தியதாகவும்  அவர்களின் காரை பறிமுதல் செய்து,  இந்த விபத்தை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் உழவர் நலத்துறை செயலாளர் சமய மூர்த்தி ஆய்வு

    செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை ஊராட்சியில் உள்ள கோடிதண்டலம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 விவசாயிகளுக்கு சொந்தமான 15.4 ஏக்கர் பரப்பளவு தரிசு நிலங்கள் நீர் ஆதாரம்  இல்லாமல் விவசாயத்திற்கு பயன்படாமல் இருந்து வந்தது இந்த  தரிசு நிலத்தை விவசாயத்திற்கு ஏற்புடைய நிலமாக மாற்றி அமைத்திட வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை ஆகிய துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் முதற்கட்டமாக வேளாண் பொறியியல் துறை மூலம் 15.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கு நீராதாரம் ஏற்படுத்தும் வகையில் 200 அடி மற்றும் 250 அடி 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 17 விவசாயிகளுக்கு சமமாக நீரானது பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் சமயமூர்த்தி  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத்  ஆகியோர் ஆய்வு செய்தனர். 

  • நியாவிலை கடையில் உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். 

    கோவையில் பல்வேறு இடங்களில் கூட்டுறவு துறைதுறை உணவு வழங்கல் துறை சார்பாக ஆய்வு மேற்கொள்ள உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை புரிந்துள்ளார். பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் பீளமேடு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டார். 

  • தன்னுடைய உடல்நலம் குறித்து விசாரித்தவர்களுக்கும், நலம் பெற வேண்டிக்கொண்டவர்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

  • சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் அருகே உள்ள ஜவஹர் மில் திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு

    தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தி அது உறுதித்தன்மையை அறிந்து சான்றிதழ் வழங்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டது இதனடிப்படையில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ஜமில் திடலில் நடைபெற்றது சேலம் துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ ராஜன் தலைமையில் ஒன்றாக பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நடைபெற்றது.

  • அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேருக்கு மகாராஷ்டிரா மாநில துணை சபாநாயகர் இன்று தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

  • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் 27ஆம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்

  • தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

  • ஓ.பன்னீர்செல்வத்தால் தொண்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

  • ராகுல் காந்தி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி காங்கிஸ் கட்சியினர் கேரளாவில் மறியலில் ஈடுபட்டனர்.

  • சீர்காழி சீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்

    சீர்காழி தென்பாதியில் சீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் புதிதாக தியான மண்டபம்,சீரடி சாய்பாபா மற்றும் குபேர மகாலட்சுமி மகாசரஸ்வதி ஜோதி ஸ்தபம் ஆகிய சன்னதிகள் நிர்மாணிக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • திராவிட மாடல் ஆட்சியில் பட்டியிலின மக்களுக்கு பாதுகாப்பில்லை: நாகை.திருவள்ளுவன்

    திராவிட மாடல் ஆட்சியில் பட்டியிலின மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று  தமிழ்புலிகள் கட்சியின் மாநிலத்தலைவர் நாகை.திருவள்ளுவன் பழனியில் குற்றம் சாட்டியுள்ளார். 

  • அதிமுக-வினர் ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்: கி வீரமணி 

    அதிமுக-வினர் திராவிடர் கழகம்தான் தாய் கழகம் என்பதையும் அதிமுக-வின் தாயாக இருந்த ஜெயலலிதாவையும் மறந்துவிட்டார்கள் என்றும் திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கூறியுள்ளார்.

  • இப்போது தொற்றுக்கு தீவிரம் அதிகமுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தற்பொழுது பரவக்கூடிய தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவக்கூடிய வகையில் வீரியம் அதிகமாக உள்ளதால் அனைவரும் முககவசம் அனிவது அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

  • ஸ்ரீபெரும்புதூர்: வருவாய்த்துறை இன்று அதிரடி நடவடிக்கை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் குயின்ஸ்லாந்து என்ற தனியார் பொழுதுபோக்கு நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த 200கோடி மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறை இன்று அதிரடியாக மீட்டனர். மீட்டெடுக்கப்பட்ட அரசு நிலத்தில் குயின்ஸ்லாந்து நிருவனம் ரோப் கார், புட் கோர்ட், போட் ஹவுஸ்,நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களாக மாற்றி அமைத்து பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

  • இனி கனவில்தான் பொதுக்குழு: கோவை செல்வராஜ்

    11 ஆம் தேதி பொதுக்குழு என்பது இனி கனவில்தான் நடக்கும் என்றும் அதிமுக-வில் குழப்பம் ஏற்படுத்தவே இபிஎஸ் தரப்பு இப்படி செய்கிறது என்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியுள்ளார்

  • மாணவிகளை புத்தகம் சுமக்க வைத்த விவகாரம்:  4 பேர் பணியிடை நீக்கம் 

    ராமேஸ்வரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை புத்தகங்களை சுமக்க வைத்த காரணத்திற்காக 3 ஆய்வாளர் ஆய்வக உதவியாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

  • 'என் குப்பை என் பொறுப்பு': சைக்கிள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை மேயர்.

    கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடையே தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார் சைக்கில் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  

  • கோவை: கூட்டு துப்புரவு பணி

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கூட்டு துப்புரவு பணி நடைபெற்றது. இதற்கு காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமை வகித்தார். 

  • தூத்துக்குடி: அரசு மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று

    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 200 மாணவ, மாணவிகள் கொரோனா பரிசோதனை செய்ததில் 30 மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கல்லூரி விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக தகவல். 

  • ஜீ தமிழ் நியூஸ் தொலைக்காட்சியின் மாபெரும் கல்விக் கண்காட்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தொடங்கியது. +2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக ‘நாளைய இலக்கு’ என்ற பெயரில் இந்தக் கல்விக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. AMRITA VISHWA VIDYAPEETHAM,AMET UNIVERSITY மற்றும் DOT SCHOOL OF DESIGN உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜீ தமிழ் நியூஸ் தொலைக்காட்சியுடன் இணைந்து இந்தக் கல்விக் கண்காட்சியை நடத்துகின்றன. 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்

    தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகமாக உள்ளது என ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார். பொறியியல், மருத்துவம் ஆகிய 2 படிப்புகளை மட்டும் கனவாக நினைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

  • முட்டை விலை வரலாறு காணாத வகையில் உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் 75 லட்சம் முட்டைகள் உற்பத்தியில் சரிவை சந்தித்துள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் அளித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவானது 5 ரூபாய் 20 காசுகளாக இருந்த முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையினை 15 காசுகள் உயர்த்தி 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ளது.

  • காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு

    தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதி வருகின்றனர். காலை ஆங்கில தேர்வும்,  மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் பேனா  போன்றவற்றை மட்டுமே கொண்டு வரவேண்டும் எனவும் அவற்றை தவிர மற்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  • இளையராஜா சாமி தரிசனம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். 

  • முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் ‘கல்லூரி கனவு‘ நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

     

  • மாயாவதி ஆதரவு

    பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு. இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல; பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என மாயாவதி தெரிவித்துள்ளார்

  • மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்

    சென்னையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இயங்குவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

  • கொரோனா பாதிப்பு 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,940 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு. 20 பேர் உயிரிழந்துள்ளனர். 

    வேலுமணி மீதான புகார் - ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகாரில் முறைகேடுகளுக்கு துணைபோன 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 அரசு அதிகாரிகளை வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு    

  • காய்கறி கடையில் தீ விபத்து 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் காம்பவுண்டில் கொட்டி கடைவீதியில் போடப்பட்ட ஐந்து காய்கறி கடைகள் தீயில் இருந்து நாசம் பல லட்ச ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் சேதம்.

    நெல்லையப்பர் கோவிலுக்கு அன்பளிப்பு

    திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் சுப்ரமணியர் தேருக்கு சுமார் 16 லட்சம் மதிப்பிலான 2400 கிலோ எடைகொண்ட  நான்கு இரும்பு சக்கரங்கள் மற்றும் இரண்டு ஆக்சில்கள் வழங்கப்பட்டுள்ளது.அதனை பொருத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

     

     

  • உத்தவ் தாக்கரே வேதனை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    முதல்வர் பதவி குறித்து கவலையில்லை; முதுகில் குத்தியதுதான் வலிக்கிறது - உத்தவ் தாக்கரே

     

  • தமிழகத்தில் வெற்றிடம்

    தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

  • கல்லூரி கனவு நிகழ்ச்சி

    +2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • கல்விக் கண்காட்சி

    ஜி தமிழ் நியூஸ் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி சென்னையில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link