Live Update: 2022 ஜூன் 16 இன்றைய முக்கிய செய்திகள் உடனுக்குடன்
Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழகத்தில் 16.06.2022 முக்கிய நிகழ்வுகளின் விவரங்களை உடனுக்குடன் பதிவிடும் நேரலை
Latest Updates
ஒருங்கிணைப்பாளர் பதவியை என்னிடமிருந்தாலும் தலைமை கழக நிர்வாகிகள் மட்டுமே அனைத்தையும் முடிவெடுபார்கள்
எனக்கு எதிராக அதிமுகவில் எந்த குழுவும் செயல்படவில்லை
இந்த ஒற்றை தலைமை பிரச்சனை எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது
-ஓபிஎஸ்
அம்மா மறைவிற்குப்பின் தற்காலிக ஏற்பாடாக கட்சியை நடைமுறை படுத்த வேண்டும் என்பதற்காக சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்
-ஓபிஎஸ்
நான் தொண்டர்களை காப்பாற்றவே இந்த இயக்கத்தில் இருக்கிறேன். நான் ஒற்றுமையாக பணியாற்றி மீண்டும் அம்மாவின் ஆட்சியை பிடிக்க வேண்டும் இதுவே நமது தலையாய கடமை. இரட்டைத் தலைமை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அம்மா காலத்தில் ஒற்றை தலைமையாக பொதுச்செயலாளராக இருந்தார். அவருக்கு மட்டுமே இந்த பதவி சிறப்பாக என்றுமே அமைந்திருக்கும். ஒற்றை தலைமை பொதுச் செயலாளர் பதவி யாருக்காவது கொடுக்க நினைத்தால் அது ஜெயலலிதாவிற்கு செய்கின்ற மிகப் பெரிய துரோகம் -ஓபிஎஸ்
ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு!
6 ஆண்டுகாலம் இருவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் இருந்து வருகின்றோம். துணை முதல்அமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை ஆனால் இருந்தாலும் கட்சி நன்மைக்காக பிரதமர் கேட்டு கொண்டதால் நான் யேற்று கொண்டேன். பொது குழுவில் பல்வேறு திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வர முடியும். ஆனால் 30 ஆண்டுகள் பொது செயலாளர் பதவி வகித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் பொது செயலாளர் பதவி அவருக்கு மட்டுமென உரியது என்று நானும் EPS ம் முடிவு செய்தோம். தொடக்கத்தில் இரட்டை தலைமை குறித்து நான் கூட EPS இடம் கேட்டேன் இது புதிதாக இருக்கிறதே என்று கூறினார் -ஓபிஎஸ்
ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு!
தொண்டர்களுக்காக இயக்கமாக தான் அதிமுக தொடங்கப்பட்டது. லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் இந்த இயக்கத்தின் இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் என்பது கழகத்தில் இருக்கும் அடிப்படை உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டவர் தான். பொதுச்செயலாளர் பதவி என்பது எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அவர்கள் வகித்த பதவி - ஓபிஎஸ்
தாம்பரம் மாநகர போலீஸ் கமினராக பதவியேற்ற பின் கூடுதல் டிஜிபி அமல்ராஜ் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்
பல்லடம் அருகே 9ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்.
உசிலம்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து சென்றனர்
வாலாஜாபேட்டை அருகே தனது மகளுக்கு புத்தகத்தை வாங்க சென்ற தம்பதி மீது அரசுப் பேருந்து மோதியதில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலி
தமிழக பாஜாகாவில் பதவி மற்றும் பொறுப்பு பெற பல லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஆடியோ ஒன்று பரவி வருகிறது.
ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலையளிப்பதாக ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சாய்பல்லவி மீது புகார்
காஷ்மீர் படுகொலையை கொச்சைப்படுத்தியதாக ஹைதராபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் சாய்பல்லவி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புகார் கொடுத்துள்ளார். எனினும் காவல்துறையினர் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை
அகவிலைப்படி உயர்வு
நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது
ஜவாஹிருல்லா கண்டனம்
டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது கொடூர தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்
அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பேரறிஞர் அண்ணா நுழைவாயில் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டு வரும் பணியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்
அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை பா.ஜ.க விரும்புவதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தம்பிதுரை மற்றும் கே.பி.முனுசாமியுடன் ஆலோசனை நடத்துகிறார்
தமிழகத்தின் எதிர்க்கட்சி தேமுதிக - பிரேமலதா
தமிழகத்தின் எதிர்க்கட்சி தேமுதிக என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததால் அதிமுக ஆட்சியை இழந்தது. விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவின் கட்சி பொறுப்பை ஒப்படைப்பது குறித்து விஜயகாந்த் முடிவெடுப்பார் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கொடி பிடிக்கவும் தெரியும், ஆயுதம் ஏந்தவும் தெரியும்
காங்கிரஸ்காரனுக்கு கொடி பிடிக்கவும் தெரியும், ஆயுதம் ஏந்தவும் தெரியும். காந்தி மட்டுமல்ல, நேதாஜியும் எங்கள் தலைவர் தான். நாங்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தால் தான் மோடி இன்று பிரதமராகி ஆட்டம் போட முடிகிறது. நுபுர் சர்மா பேச்சுக்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை திசை திருப்பவே ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்படுகிறது - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஜெயக்குமார் பதிலடி
உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசிய ஜெயக்குமார் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை செல்வராஜ் பேட்டி கொடுத்த நிலையில், “தெருவில் போற கண்டவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்
முன்ஜாமீன் மனு தள்ளுபடி
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ரூ.10 ஆயிரம் அபராதம்
பாலாற்றில் ஒவ்வொரு 10 கிலோமீட்டர் இடைவெளியில் தடுப்பணைகளை கட்டக் கோரிய வழக்கை, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் பதற்றம்
அக்னிபத் என்ற பாதுகாப்பு படையின் புதிய தற்காலிக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக பீகாரின் நவாடா என்ற இடத்தில் பாஜக அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீ வைத்த இளைஞர்கள்
+2 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
நான் யார் பக்கம்? - பொன்னையன்
கட்சியின் நிலைபாடு தான் என்னுடைய நிலைப்பாடு என தெரிவித்துள்ள பொன்னையன், ஒற்றைத் தலைமை குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். ஓ.பிஎஸ் - இபிஎஸ் இமையும் - கண்ணும்போல இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார்
களத்தில் மீண்டும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள், கூட்டுறவு நியாய விலைக் கடைகள், அமுதம் அங்காடிகள் ஆகியவற்றில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன ஆய்வு மேற்கொண்டார்.
வீடு திரும்பிய ஓ.பி.எஸ்
அதிமுக தலைமைக் கழகத்துக்கு சென்ற ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை கிரீன்வேஸில் இருக்கும் வீட்டிற்கு திரும்பினார்
ரேஷன் அரிசி கடத்தல்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியுடன் கூடிய சரக்கு வாகனத்தை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஜவுளிக் கடையில் நூதன திருட்டு
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் தனியார் ஜவுளிக்கடையில் ஊழியரை திசைதிருப்பி ஜவுளிகளை திருடிச் செல்லும் மூதாட்டிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தை ஜெயக்குமார், சிவி சண்முகம், வளர்மதி ஆகியோர் புறக்கணிப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது தாக்குதல்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
தாம்பரம்: அமைச்சர் மா சுப்பிரமணியம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பரபரப்பு
தாம்பரம் சானிடோரியத்தில் நடைபெற்ற அமைச்சர் மா சுப்பிரமணியம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அமைச்சருக்கும், தாம்பரம் எம்.எல்.ஏ-க்கும் மட்டும் சால்வை அணிவித்து ஒரு பட்சமாக நடந்து கொண்ட மாமன்ற உறுப்பினரை அமைச்சர் முன்னிலேயே துனை மேயர் கேள்வி கேட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தொண்டர்கள் எதிர்பார்ப்பது நடக்கும்: ஓபிஎஸ்
தொண்டர்கள் எதிர்பார்ப்பது பொதுக்குழுவில் நடக்கும் என தனது இல்லத்திலிருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் முன் அளித்த பேட்டியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாகனங்களை ஓட்டிய சிறுவர்கள்: 525 வழக்குகள் பதிவு
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சிறப்பு வாகன தணிக்கையை போக்குவரத்து காவலர்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 14ம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டியது தொடர்பாக 525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சரக்கு வாகனத்தை வளைத்துப் பிடித்த கிராம மக்கள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியுடன் கூடிய சரக்கு வாகனத்தை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா?
தமிழ்நாட்டில் மே மாதம் 12ம் தேதி கொரோனா தொற்றுடன் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 441 ஆக இருந்தது. தொற்று உறுதியின் சதவிகிதம் 0.3% ஆக இருந்தது. ஜூன் 1ம் தேதியன்று இது 0.8% ஆக இருந்தது. தற்போது இது 1.5% ஆக உயர்ந்துள்ளது.
பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் வீட்டில் 3 ஆவது நாளாக ஆலோசனை
ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் 3ஆவது நாளாக ஆலோசனை நடக்கிறது. வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,755-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 120 உயர்ந்து 38,040-க்கு விற்பனையில் உள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 5,154 ஆகவும், 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 3,895 ஆகவும் விற்கப்படுகின்றன.
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் உயிரிழப்பு
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் மார்ச் 17 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழப்பு பதிவனாது என்பது குறிப்பிட்டத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஈ.பி.எஸ்க்கு ஆதரவாக சுவரொட்டி
அதிமுகவில் ஒற்றை தலைமை பேச்சு விவகாரம்-ஈ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து பூந்தமல்லியில் இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உசிலம்பட்டி: சிசுக் கொலை
உசிலம்பட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன சிசுவை சாலையோரம் வீசிச் சென்ற கொடூரம் - நாய்கள் கடித்து சிதைந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் நாய்களிடமிருந்து ரத்தக் கறையுடன் கிடந்த துணியை எடுத்து பார்த்த போது, பிறந்து சில மணிநேரமே ஆன சிசுவை நாய்கள் கடித்து சிதைத்திருந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிதைந்த நிலையில் உள்ள சிசு, ஆணா பெண்ணா என்பது தெரியவில்லை. பெண் சிசுக்கொலைக்கு பிரபலமானது உசிலம்பட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக வாகன நிறுத்தம் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்துவதற்காக 83 இடங்களில் சுமார் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடங்கள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகன நிறுத்த இடங்களில் கூடுதலாக வாகன நிறுத்தம் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தனியார் ரயில் சேவையை திரும்பப் பெறுக: திமுக
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கழகத்தின் பொருளாளருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கோவை - சீரடி இடையிலான 'பாரத் கவுரவ்' இரயில் இயக்கத்தில் தனியாரை ஈடுபடுத்தும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, ஒன்றிய இரயில்வே அமைச்சக்கு டி.ஆர். பாலு கடிதம் எழுதியுள்ளார்.