Live Update: 2022 ஜூன் 28 இன்றைய முக்கிய செய்திகள்
Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 28.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
Latest Updates
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஜூலை மாதம் முதல் நாளில் இருந்து நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
உதகை அருகே தொட்டபெட்டா மலை சிகர சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
பீகார் மாநிலத்தை சார்ந்த 6 கல்லூரி மாணவர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா பயணம் வந்தபோது, உதகை அருகே தொட்டபெட்டா மலை சிகர சாலையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. அதில் மாணவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு
அதிமுக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆசுவாசம்
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. தர்போது அந்த நிபந்தனையை முழுவதுமாக தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன் சிறையில் செல்போன் வைத்திருந்த வழக்கு தள்ளுபடி
சிறையில் செல்போன் வைத்திருந்ததாக, ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு வேலூர் சிறையில் உயர் பாதுகாப்பு பகுதியில் திடீர் சோதனை நடத்திய போது, முருகனிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.ஒற்றைத் தலைமைக்கு பெருகும் ஆதரவு
அதிமுகவில் ஒற்றை தலைமை வலியுறுத்தி பொதுக்குழு உறுப்பினர்கள் 2462 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக கையொப்பமிட்டுள்ளனர். மொத்தம் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 77 பேர் மட்டுமே ஒ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்ற நிலையில் அமோக ஆதரவுடன் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வலுக்கிறது.
மீண்டும் அதிமுக பொதுக்குழு
வானகரம் மண்டபத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11 ஆம் தேதி கூடும் பொதுக்குழுவிற்கான இடம் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கமாக நடைபெறும் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே நடத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பாஜகவுக்கு செல்கிறாரா ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை விசுவரூபமாக எழுந்திருக்கும் நிலையில் ஒபிஎஸ் பாஜகவில் இணைவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குற்றாலம் கே. ஆர் ரிசார்ட்டில் வைத்து நடந்தது. இந்த விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ஜே.பி.ஜெயபிரகாஷ், இஸ்மாயில், பூசைத்துரை ஆர்.டி.வி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமாட்சி ராம்குமார் வரவேற்றார்.
சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கோனப்பட்டு அடுத்த வேங்கடத்தான் வட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் விஜயன்.
ஆசிரியர் விஜயன் அதே பகுதியில் இருந்து ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமியிடம் கல்வி கற்று கொடுப்பது போல் பாலியல் சீண்டல் செய்துள்ளார். சிறுமி தன்னுடைய பெற்றோர்களிடம் தகவலை கூறியதன் அடிப்படையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு விரைந்து சென்று ஆசிரியரை சரமாரியாக தாக்கி திருப்பத்தூர் கிராமிய காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் எனக்கு முதலிடம் வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகபெண் கவுன்சிலர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் எனக்கு முதல் இடம் வேண்டும் என 21வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் உமா மகேஸ்வரி போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது நான் பதவி ஏற்ற காலத்தில், அன்று முதல் இடத்தில் உட்கார வைத்தனர். தற்போது உங்களுக்கு தேவையான கவுன்சிலர்களை முதல் இடத்தில் உட்கார வைத்தீர்களா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் புதிதாக பதவி ஏற்ற நகராட்சி ஆணையாளர் பாலு நகர மன்ற தலைவி, நகர மன்ற துணைத் தலைவர் வியப்பில் ஆழ்ந்தனர்.
லாக் அப் மரணம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
காவல் நிலையத்தில் சித்தரவதை செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மகனின் இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் இழப்பீடு வழங்க கோரி மதுரையைச் சேர்ந்த ரங்கம்மாள் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கு குறித்து தமிழகம் முதன்மை உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கொரோனா பரவல்: அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
வரும் மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் நடைபெற உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தி, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திலேயே நடைபெறும்
அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்த மாற்று இடம் தேடி வந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருத்தி வரத்து அதகிரிப்பு
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வரத்து அதகிரித்துள்ளது. 6000 மூட்டை பருத்தி ரூ.2.30 கோடிக்கு ஏலம்.
திமுக-அதிமுகவினரிடையே கடுமையான வாக்குவாதம்
தருமபுரி நகர் மன்ற கூட்டத்தில் பணிகள் ஒதுக்குவதில், பாரபட்சம் காட்டுவதாக, திமுக நகர் மன்ற தலைவரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக-அதிமுகவினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: தேயிலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தேயிலை வாரிய செயல் இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஓலா கார் ஓட்டுநர்கள் போராட்டம்
ஓலா கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஓட்டுனர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு. சென்னை பல்லாவரம் சந்தை சாலையில் ஓலா கார் ஓட்டுநர்கள் ஒன்று கூடி போரட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்: பாஜக சார்பில் இன்று கடையடைப்பு.
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மீண்டும் அறிவிக்கக்கோரி பாஜக சார்பில் இன்று கடையடைப்பு.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி, அதிமுக பொதுக்குழு, செயற்குழு மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் டி ஆர் இ யூ ரயில்வே தொழிற்சங்க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு மூன்று நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு செல்கிறார்.
அரியலூர்: வானில் இருந்து எதுவும் விழ வில்லை - ஆட்சியர் ரமணசரஸ்வதி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் பகுதியில் சத்தம் கேட்டதாகவும், ஆனால் வானில் இருந்து ஏதேனும் விழுந்து இருந்தால் புகை மூட்டம் ஏற்பட்டு இருக்கும். தற்போது வரை அது போல் எதுவும் கண்டறிப்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தகவல் அளித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்
நீட் தேர்வு திட்டமிட்டபடி ஜூலை 17ஆம் தேதி நடக்குமென்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் மேலும் 9 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்காலிக அடிப்படையிலான ஆசிரியர் நியமனத்தை கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
டெங்கு காய்ச்சல் அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவை ஈசிஆரில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பதில் மனு அனுப்புவது தொடர்பாக சி.வி.சண்முகத்துடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்தோடு தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு அளிக்க திட்டம்.
ஓபிஎஸ் ஆதரவாளர் மீது புகார்
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு. மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீஸ் நடவடிக்கை. கடந்த 18ம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தான் தாக்கப்பட்டதாக பெரம்பூர் பகுதி அதிமுக நிர்வாகி மாரிமுத்து புகார் கொடுத்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவடைந்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 369 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 593 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவது நமக்கு பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் உலகமே தமிழகத்தை உற்றுநோக்க உள்ளது. உரிய நேரத்தில் எடுத்த முயற்சியால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டாசு ஆலைகளுக்கு எச்சரிக்கை
பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் ஆலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கும் அதரவு
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் ஆதரவு. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,440-ஆக அதிகரிப்பு
சென்னை மாமன்ற கூட்டம்
சென்னை மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடத்தப்படும். அந்த வகையில், இந்த மாதத்திற்கான மாமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை மேயர் பிரியா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது, ஒப்புதல் பெறுவது ஆகியவை இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மதுரையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் இன்று முதல் ரூ.500 அபராதம்
மதுரையில் மாஸ்க் அணியாமல் சுற்றினால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம்
தற்போது மீண்டும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்படுகிறது.பிளஸ்-1 தேர்வில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி
8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் 90 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் சென்னையில் இருந்து இன்று புறப்படுகிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.