Live Update: இன்றைய முக்கிய செய்திகள் உடனுக்குடன் (2022 ஜூன் 02)

Thu, 02 Jun 2022-9:29 am,

Tamil Nadu Top News Today and Latest News: தமிழ்நாட்டில் 2022 JUNE 2ம் நாளின் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம்...

Latest Updates

  • நடிகர் டி.ராஜேந்தர் சிகிக்சைக்காக அமெரிக்க செல்ல உள்ளார்.

    நடிகரும் சிம்புவின் அப்பாவுமான டி.ராஜேந்தர் சிகிக்சைக்காக 2 நாட்களில் வெளிநாடு செல்ல உள்ளார்.

  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வழக்கு: 

    திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

  • ஆளுநர் - முதல்வர் சந்திப்பு

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் சந்திக்கிறார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உள்ளனர்

  • கோவை மாநகராட்சியின் புதிய ஆணையர் பிரதாப் பொறுப்பேற்றுக் கொண்டார்:

    கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பிரதாப் நியமிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். முன்னாள் ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அவரது பொறுப்பை  புதிய ஆணையாளர் பிரதாப் யிடம் ஒப்படைத்ததை யடுத்து  பொறுப்பு ஏற்பு கோப்பில் கையெழுத்திட்டு கோவை மாநகராட்சியின்  ஆணையாளராக பிரதாப் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  • தீக்குளித்து பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்:

    கோவையில் தொழிலதிபரின் பாலியல் தொந்தரவு காரணமாக தீக்குளித்து கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த பெண் சிகிச்சை பலனின்றி, இன்று  பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சூழலில் ஏற்கனவே தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தலைமறைவாக உள்ள நவநீதன் மற்றும் அகிலாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மலர் உறவினர்கள் நவநீதன் அவருடைய மனைவியை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • அலுவலகத்தில் புகுந்த பாம்பு:

    குற்ற வழக்கு தொடர்புத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பால் அலுவலர்கள் அதிர்ச்சி. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

    மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும். மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், குழுவின் உறுப்பினர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • காவிரி நீருக்கு மேலையூரில் பூத்தூவி வரவேற்பு

    மேட்டூரில் இருந்து திறக்கபட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணிதுறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்துவி வணங்கி வரவேற்றனர்.

  • தமிழகத்தில் கொரோனா 4வது அலையா?

    தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டி பதிவாகியுள்ளது. இதனை துவக்கத்திலேயே கட்டுப்படுத்த, கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர்.திருமதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரதமரின் பிறந்தநாள் வாழ்த்து 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு கடிதம் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரித்துள்ளார். பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  • ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

    நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பூச்சி முருகன் பொருளாளர் நடிகர் கார்த்திக், ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தனர். தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினி கோரிக்கை வைத்துள்ள நிலையில், தற்போது நடிகர் சங்க நிர்வாகிகள் அவரை சந்தித்துள்ளனர். 

  • அகில உலக கராத்தே போட்டியில் 12 தங்கப் பதக்கங்களை குவித்த தமிழக மாணாக்கர்கள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மலேசியாவின் இப்போ நகரில் நடைபெற்ற 18வது அகில உலக கராத்தே போட்டியில் 7 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

    அதில் தமிழகத்தின் சார்பில் கலந்துக் கொண்ட 12 மாணவ,மாணவிகள், 21 பிரிவுகளில் விளையாடி 12 தங்கப்பதக்கமும்,5 வெள்ளிப் பதக்கமும்,5 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    சென்னை வந்த வெற்றி வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது

  • முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

    முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதுகலை நீட் தேர்வு முடிவுகளுடன் கட் ஆஃப் மதிப்பெண்ணையும் வாரியம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்ற்றுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். என்.பி.இ-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான nbe.edu.in -க்கு சென்று மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். 

  • ஜிஎஸ்டி வருவாய் தமிழகத்தில் அதிகரித்தது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கடந்த மே மாதத்தில் இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 44% அதிகமாகி ₹1,40,885 கோடியாக இருந்தது.

    ஜிஎஸ்டி வருவாயில் தமிழ்நாடு 41% உயர்வைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் தெலுங்கானாவின் வளர்ச்சி விகிதம் முறையே 47%, 80% மற்றும் 33% ஆகும்.

     

  • சென்னை மலர் கண்காட்சிக்கு கட்டணம் நிர்ணயம் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தோட்டக்கலை துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை நடைபெறும் பிரம்மாண்டமான மலர் கண்காட்சி ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெறும்.  

    இதற்கான நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

  • கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

    தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  • சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு 10 கோடி நிதி ஒதுக்கீடு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் விடுவித்து அரசாணை வெளியிட்டது.

    போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது.

  • மாநாட்டை புறக்கணித்த தமிழகம்

    குஜராத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link