Tamil Nadu Urban Election Results 2022 LIVE: திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tue, 22 Feb 2022-10:10 pm,

Tamil Nadu Urban Election Results 2022 LIVE: வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 12,838 ஆகும். இந்த வார்டுகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 60.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பேரூராட்சிகள், நகராட்சிகளில் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்தாலும், மாநகரப் பகுதிகளில் மந்தமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னையில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பதிவானது.


இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Latest Updates

  • சட்டமன்ற வாசலை மிதிக்காத, அண்ணா அறிவாலயம் பக்கமே வராத, ஏதோ ஒரு குக்கிராமத்தில் கட்சிக்கு உழைக்கிறானே ஒரு தொண்டன் அவனை முதலில் மதியுங்கள் -திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

  • தனக்கு கவர்னர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவி ஆசையில்லை எனவும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவு செய்துவிட்டு தனது விருப்பமான தொழிலான விவசாயம் செய்ய இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • தமிழகத்தில் வாக்கு சதவீகித அடிப்படையில் பா.ஜ.கவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது: பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

  • திருத்துறைப்பூண்டியில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசம்.

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வடசென்னையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கானா பாலா தோல்வியை தழுவினார்.

  • பண மழை, அதிகார அடக்குமுறையை மீறி கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பாமக பெற்ற வெற்றி மகத்தானது: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு

  • சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் (மொத்த இடங்கள் 699)

    திமுக - 421
    அதிமுக 147
    பாமக - 27
    தேமுதிக - 1
    பாஜக - 3
    காங்கிரஸ் 17
    கம்யூனிஸ்ட் - 5
    விடுதலை சிறுத்தை - 3
    சுயேச்சைகள் - 75

  • கோடம்பாக்கம் - மண்டலம் 10 (மொத்தம் 16 வார்டுகள்)

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    முடிவுகள் அறிவிக்கப்பட்டவை - 16/16

    திமுக - 13
    மதிமுக - 1
    பாஜக - 1
    விசிக - 1
    அதிமுக - 0

    வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்:

    1) வார்டு 127 - திமுக வெற்றி (லோகு)

    2) வார்டு 128 - திமுக வெற்றி  (ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா)

    3) வார்டு 129 - திமுக வெற்றி (ரவிசங்கர் (எ) மு.ராசா)

    4) வார்டு 130 - திமுக வெற்றி (பாஸ்கரன்)

    5) வார்டு 131 - திமுக வெற்றி (கோமதி)

    6) வார்டு 132 - திமுக வெற்றி (கார்த்திகா)

    7) வார்டு 133 - திமுக வெற்றி (ஏழுமலை)

    8) வார்டு 134 - பாஜக வெற்றி (உமா ஆனந்தன்)

    9) வார்டு 135 - விசிக வெற்றி ( சாந்தி (எ) யாழினி)

    10) வார்டு 136 - திமுக வெற்றி (நிலவரசி துரைராஜ்)

    11) வார்டு 137 திமுக வெற்றி (தனசேகரன்)

    12) வார்டு 138 - திமுக வெற்றி (கண்ணன்)

    13) வார்டு 139 - மதிமுக வெற்றி (சுப்பிரமணியன்)

    14) வார்டு 140 - திமுக வெற்றி (எம்.ஸ்ரீதரன்)

    15) வார்டு 141 - திமுக வெற்றி (ராஜா அன்பழகன்)

    16) வார்டு 142 - திமுக வெற்றி (கிருஷ்ணமூர்த்தி)

  • 138 வார்டு மொத்த வாக்குகள் 19,503  

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      முதல் சுற்று மற்றும் தபால்  வாக்குகள்

    • திமுக வேட்பாளர் கண்ணன்: 3235

    • அதிமுக வேட்பாளர் காமராஜ்: 2587

    • பாஜக வேட்பாளர் பிரேம் நாத்: 270

    கண்ணன் திமுக முன்னிலை

  • முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான கழக அரசுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரமே நகர்ப்புற உள்ளாட்சி வெற்றி. வாக்களித்தவர்களுக்கு நன்றி. வெற்றிக்கு உழைத்த முத்தமிழறிஞரின் உடன்பிறப்புகளுக்கு என் அன்பு. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப உழைக்கவேண்டியது நம் கடமை. வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின்

  • திமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மர்தூவி மரியாதை செலுத்தினர்.

  • வார்டு 137-திமுக வேட்பாளர் தனசேகரன் வெற்றி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இவர் 10578 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் (மற்ற அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழப்பு)

    திமுக-15568

    அதிமுக-4985

    பாஜக-2679

  • சென்னை மாநகராட்சி அடையார் மண்டலம் 13

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மொத்தம் வார்டுகள் 13

    13வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றுள்ளது.

    வெற்றி நிலவரம்

    திமுக - 11+1(காங்கிரஸ்)
    அதிமுக - 1

    வார்டு 168 - திமுக வெற்றி(மோகன்குமார்)

    வார்டு 169 - திமுக வெற்றி(மகேஷ்குமார்)

    வார்டு 170 - அதிமுக வெற்றி(கதிர்முருகன்)

    வார்டு 171 - திமுக வெற்றி (கீதா முரளி)

    வார்டு 172 - திமுக வெற்றி (துரைராஜ்)

    வார்டு 173 - திமுக கூட்டணி காங்கிரஸ் (சுபாஷினி)

    வார்டு 174 - திமுக வெற்றி(ராதிகா.ம)

    வார்டு 175 - திமுக வெற்றி(மகேஷ்வரி முருகவேல்)

    வார்டு 176 - திமுக வெற்றி(ஆனந்தம்)

    வார்டு 177 - திமுக வெற்றி ( வேளச்சேரி மணிமாறன்)

    வார்டு 178 - திமுக வெற்றி( பாஸ்கரன்)

    வார்டு 179 - திமுக வெற்றி (கயல்விழி ஜெயக்குமார்)

    வார்டு 180 - திமுக வெற்றி (விசாலாட்சி கபிலன்)

  • சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் 9ன் அனைத்து வார்டுகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தேனாம்பேட்டை - மண்டலம் 9, மொத்தம் 18 வார்டுகள்

    முடிவுகள் அறிவிக்கப்பட்டவை - 18/18

    வெற்றி நிலவரம்

    திமுக - 18
    அதிமுக - 0

    வார்டு வாரியான நிலவரம்

    1) வார்டு 109 - D-Cong - வெற்றி

    2) வார்டு 110 - D வெற்றி

    3) வார்டு 111 - D வெற்றி

    4) வார்டு 112 - D வெற்றி

    5) வார்டு 113 - D வெற்றி

    6) வார்டு 114 - D வெற்றி

    7) வார்டு 115 - D வெற்றி

    8) வார்டு 116 - D வெற்றி

    9) வார்டு 117 - D வெற்றி

    10) வார்டு 118 - D வெற்றி

    11) வார்டு 119 - D வெற்றி

    12) வார்டு 120 D வெற்றி

    13) வார்டு 121 - D வெற்றி

    14) வார்டு 122 - D வெற்றி

    15) வார்டு 123 - D.CPI(M) வெற்றி

    16) வார்டு 124 - D வெற்றி

    17) வார்டு 125 - D வெற்றி

    18) வார்டு 126 - D.Cong வெற்றி

  • மண்டலம்-13
    வாக்கு இயந்திரம் உடைக்கப்பட்டதால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட ஓடைக்குப்பம் பகுதியை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சி 179 வது வார்டில் திமுக வேட்பாளர் கயல்விழி ஜெயக்குமார் வெற்றி பெற்றார்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கயல்விழி (திமுக) - 6240 வாக்குகள்
    ஜமுனா( அதிமுக ) - 4301 வாக்குகள்
    ராஜலட்சுமி (பிஜேபி) - 2266 வாக்குகள்

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

     

  • 134 வது வார்டு:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 134 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  • வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.

    அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின்  செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

  • ராயபுரம் தொகுதியை கைப்பற்றியது திமுக: 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மொத்த வார்டுகள் - 15

    வெற்றி நிலவரம்:

    திமுக கூட்டணி -15/15, தி.மு. க - 12, காங்கிரஸ்-2, இந்தியன் யூனியன் முஸ்லிம் -1

    வார்டு 49 - தி.மு.க (இளங்கோ (எ) இளைய அருணா)

    வார்டு 50 - காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி (சுரேஷ் குமார்)

    வார்டு 51 - தி.மு.க (நிரஞ்சனா ஜெகதீசன்)

    வார்டு 52 - திமுக(கீதா)

    வார்டு 53 - திமுக (வேளாங்கன்னி)

    வார்டு 54 - தி.மு.க (ஸ்ரீராமலு)

    வார்டு 55 - தி.மு.க (நவீன்)

    வார்டு 56 - தி.மு.க (பரிமளம்)

    வார்டு 57 - திமுக(ராஜேஷ் ஜெயின்)

    வார்டு 58 - திமுக(ராஜேஷ்வரி)

    வார்டு 59 - தி.மு.க (சரஸ்வதி)

    வார்டு 60 - தி.மு.க (ஆசாத்)

    வார்டு 61 - ஐ.யூ.எம்.எல் - தி.மு.க கூட்டணி (பாத்திமா அகமது)

    வார்டு 62 - தி.மு.க (ஜெகதீசன்)

    வார்டு 63 -காங்கிரஸ்(ராஜசேகரன்)

  • வார்டு 171:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    171 வது வார்டில் திமுக வேட்பாளர் கீதா முரளி 5555 வாக்குகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  • வார்டு 53- மண்டலம் ராயபுரம் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    திமுக வேட்பாளர் வேளாங்கண்ணி 3584 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    திமுக வேட்பாளர் வேளாங்கண்ணி -7173 வாக்குகள்.

    அதிமுக வேட்பாளர் தீபா -3,589 வாக்குகள்.

    பாஜக வேட்பாளர் கவிதா -365 வாக்குகள்.

  • 133 வது வார்டு:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    133 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ஏழுமலை வெற்றி பெற்றார்.

    133 வார்டு மொத்த வாக்குகள் : 8859

    தி.மு.க வேட்பாளர் ஏழுமலை : 4656 வாக்குகள்

    பா.ஜ.க வேட்பாளர் காளிதாஸ் : 2304 வாக்குகள்

    அ.தி.மு.க வேட்பாளர் ராஜா : 1191 வாக்குகள்

    வித்தியாசம்: 2352 வாக்குகள்

  • 140 வது வார்டு:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    திமுக வேட்பாளர் ஸ்ரீதர் 8503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  • 128 வார்டு நிலவரம்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மொத்தம் பதிவான வாக்குகள்: 21,086

    இந்த வார்டில் திமுக வேட்பாளர் ஸ்டெல்லா 9783 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    6406 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் ரீட்டா இரண்டாவது இடத்தில் உள்ளார்

    2318 வாக்குகள் பெற்று பாஜக-வின் சரஸ்வதி மூன்றாமிடத்தில் உள்ளார்.

  • 140 வது வார்டு இரண்டாவது சுற்று வாக்கு நிலவரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சற்று முன் கிடைத்த தகவல்களின் படி திமுக வேட்பாளர் ஸ்ரீதரன்  முன்னிலை பெற்றுள்ளார்

    திமுக - எம்.ஸ்ரீதரன் - 8560

    அதிமுக - பாஸ்கரன் - 1491

    பாஜக - ராமச்சந்திரன் - 1400

  • வார்டு 62 -மண்டலம் ராயபுரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     திமுக வேட்பாளர் ஜெகதீசன் 7261 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    திமுக வேட்பாளர் ஜெகதீசன்- 8716 வாக்குகள்

    அதிமுக வேட்பாளர் கலைச்செல்வி- 1455 வாக்குகள்

    பாஜக வேட்பாளர் ஜெயச்சந்திரன்- 766 வாக்குகள்

  • சென்னை 132  வார்டு இறுதி முடிவுகள்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     திமுக வேட்பாளர் கார்த்திகா 5015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

    தி.மு.க வேட்பாளர் கார்த்திகா 7577வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

     அதிமுக வேட்பாளர் காஞ்சனாவுக்கு 2562 வாக்குகளுடன் இரண்டாம் இடமும், பா.ஜ.க வேட்பாளர் சாந்தகுமாரிக்கு 2348 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது. 

  • சென்னை மாநகராட்சி 4வது வார்டில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜெயராமன் வெற்றி

  • 139 வார்டு மதிமுக சுப்பிரமணி வெற்றி சான்றிதழ் பெற்றார்

     

  • நீண்ட தர்ணா போராட்டத்திற்கு பிறகு கள்ளக்குறிச்சி நகராட்சி 11வது வார்டில் அதிமுக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றதாக அறிவித்த நகராட்சி ஆணையர்

  • 61வார்டு  மண்டலம் ராயபுரம்: இந்தியன் யூனியன்முஸ்லிம் லீக் பாத்திமாஅஹமத் 4223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்திய யூனியன்முஸ்லிம் லீக் வேட்பாளர் பாத்திமா அஹமத் -6347
    அதிமுக வேட்பாளர் கஸ்தூரி -2124 
    பாஜக வேட்பாளர் உமாதேவி-997

  • 176 வது வார்டில் தி மு க வேட்பாளர் ஆனந்தம் வெற்றி

  • கோட்சேவுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் சென்னை மாநகராட்சி 134வது வார்டு வேட்பாளர் உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி

  • 100 இடங்களில் அமமுக வெற்ற
    2 மாநகராட்சி வார்டு, 31 நகராட்சி வார்டுகள், 67 பேரூராட்சி வார்டுகள் என 100 இடங்களை அமமுக கைபற்றியுள்ளது.

  • 26வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் 27 வது வார்டில் போட்டியிட்ட பேபி வெற்றி பெற்றுள்ளார் இவர்கள் இருவரும் மாமியார் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • சென்னை மாநகராட்சியில் 99ஆவது வார்டில் சிவகாமி ஐ.ஏ.எஸை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளார் பரிதி இளம் சுருதி. 1984 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் சத்தியவாணி முத்துவை தோற்கடித்து வெற்றி கணக்கை தொடங்கியவர் பரிதி இளம் வழுதி

  • வளசரவாக்கம் மண்டலம் 144 வார்டில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பெற்ற மொத்த வாக்குகள்: 

    திமுக - 6049 வாக்குகள்
    சுயேட்சை சீதாபதி - 2707
    அதிமுக பாரத் - 2148

  • வளசரவாக்கம் மண்டலம் 144 வார்டில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பெற்ற மொத்த வாக்குகள்: 

    திமுக - 6049 வாக்குகள்
    சுயேட்சை சீதாபதி - 2707
    அதிமுக பாரத் - 2148

  • கன்னியாகுமரி பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியது திமுக

  • அடையாறு மண்டலம் - 13, வார்டு - 169

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தபால் வாக்கு மொத்தம் - 84 (திமுக 64)

    மகேஷ்குமார் திமுக - 4437
    பழனி அதிமுக - 711
    க.வேலு பாஜக - 280
    பா.சுரேஷ் பாமக - 97
    கணேஷன் தேமுதிக - 17
    புகழேந்தி நா.த - 182

    மொத்த வாக்குகள் - 6701
    வித்தியாசம் - 3726 வாக்கு வித்யாசத்தில் திமுக வெற்றி

  • பெருநகர சென்னை மாநகராட்சி திமுக வேட்பாளர் சிற்றரசு 110 வது வார்டில் 5031 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

  • திருவொற்றியூர் கட்டிட விபத்தில் பொதுமக்களைக் காப்பாற்றிய திமுக நிர்வாகி தனியரசு சென்னை மாநகராட்சியின் 10வது வார்டு உறுப்பினராக வெற்றி

  • 175 வது வார்டில் திமுக வேட்பாளர் மகேஷ்வரி முருகவேல் 6140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

  • சென்னை மாநகராட்சி 188 வார்டில் திமுக வேட்பாளர் சமீனா செல்வம் வெற்றி. இவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட திமுக வட்டச்செயலாளர் செல்வத்தின் மனைவி ஆவார்.

  • ஹிஜாபை கழற்ற வேண்டும் என்று பிரச்சனை செய்யப்பட்ட மேலூர் நகராட்சி 8ஆவது வார்டில் பாஜக 8 வாக்குகள் மட்டுமே பெற்றது.

  • எடப்பாடி நகராட்சி 23ஆவது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி. இந்த வார்டில்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் அமைந்துள்ளது

  • ராமநாதபுரம் கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் சுயேச்சைசை வேட்பாளர்கள் வெற்றி

    ராமநாதபுரம் கமுதி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 1 வார்டில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 11 வார்டுகளில் ஏற்கனவே போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • சென்னை மாநகராட்சி மண்டலம் 3,23வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் வெற்றி பெற்றார்.

  • 42வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரேணுகா மோகன் வெற்றி பெற்றார்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    136 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி

  • வார்டு 174 - திமுக வெற்றி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வேட்பாளர் விபரம் :- திமுக - ராதிகா வெற்றி!! 

    திமுக வேட்பாளர் ராதிகா 4,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,

    பிஜேபி இரண்டாம் இடம் 

    அதிமுக மூன்றாம் இடம் 

    திமுக வேட்பாளர் :- ராதிகா

    முதல் சுற்று -3610, இரண்டாம் சுற்று- 2616, தபால் - 24, மொத்தம் - 6,250

  • சென்னை மாநகராட்சியின் வார்டு 196 அதிமுகவின் வேட்பாளர் அஸ்வினி கருணா வெற்றி

  • சென்னை மண்டலம் 6 வார்டு எண் 74ல் திமுக வேட்பாளர் பிரியா வெற்றி 

  • சென்னை மாநகராட்சி தேர்தலில் 174ம் வார்டில் திமுக வேட்பாளர் ராதிகா வெற்றி

  • திருவாரூர் நகராட்சியின் 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெற்றி

  • வேலூர் மாநகராட்சி 37 வது வார்டு திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி

  • 168வது வார்டு திமுக வேட்பாளர் வெற்றி, அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்
    168 வது வார்டு தி மு க வேட்பாளர் மோகன் குமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார் அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

  • வெற்றிபெற்ற சரஸ்வதி சான்றிதழை பெற்றுககொண்டார்

  • பணகுடி பேரூராட்சியில் அதிமுகவும் பாஜகவும் சமமாக 266 ஓட்டுகளை பெற்று சமமாக இருந்து வந்த நிலையில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

  • புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் பர்வேஷ் வெற்றி.

  • ஆலந்தூர் மண்டலம் வாக்கு எண்ணிக்கை தாமதம்..

  • பரமக்குடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1, 2, 4, 5 வார்டுகளில் திமுக வெற்றி மற்றும் 3, 6, 7, 8 வார்டுகளில் அதிமுக வெற்றி.

  • வாக்கு எண்ணும் அறையில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
    சென்னை பாரதி கல்லூரியில், வார்டு 54 வாக்கு எண்ணும் அறையை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆய்வு செய்தார்.

  • மற்ற மண்டலங்களை விட கோடம்பாக்கம் மண்டலத்தில் தபால் வாக்குகள் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம்

  • திருப்பூர் மாநகராட்சியில் திமுக 11 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை

  • வார்டு 59 -மண்டலம் ராயபுரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    திமுக வேட்பாளர் சரஸ்வதி-2701
    பாஜக வேட்பாளர் அனிதா-1114
    அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி-399

    திமுக 1587 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

  • 127 வார்டு- 3 தபால் வாக்குகள் பெற்று திமுக முன்னிலை

  • திருப்பூர் மாவட்டம் கொளத்தூர்பாளையம் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலைப்பிரியா வெற்றி

  • பழனி அருகே கீரனூர் பேரூராட்சி 3வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி; 4வது வார்டில் திமுக வெற்றி

  • கோவை கருமத்தம்பட்டி நகராட்சி 1-வது வார்டில் திமுக வேட்பாளர் வாணி ஸ்ரீ 504 வாக்குகள் பெற்று வெற்றி. கருமத்தம்பட்டி நகராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் ரமேஷ் 467 வாக்குகள் பெற்று வெற்றி. கருமத்தம்பட்டி நகராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் பழனியம்மாள் 378 வாக்குகள் பெற்று வெற்றி

  • 49 வார்டு முதல்சுற்று மொத்த வாக்குகள் 365...

    49வது வார்டு தி.மு.க வேட்பாளர் - இளங்கோ (எ) இளைய அருணா 219
    அதிமுக வேட்பாளர் - திருநாவுக்கரசு 53
    பாஜக வேட்பாளர் - வன்னியராஜன் 48
    தேமுதிக - வேட்பாளர் வேலாயுதம்
    அமமுக - யாயாத்தி வர்மா
    பாமக வேட்பாளர் - சுருதி ராஜலட்சுமி
    நாம் தமிழர் வேட்பாளர் - மோகன்

  • 174வது வார்டில் மட்டும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறத- திமுக முன்னிலை

  • திண்டுக்கல்: நத்தம் பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது

  • கோடம்பாக்கம் மண்டலம்: தபால் வாக்குகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    127 - வது வார்டு 62  தபால் வாக்குகள்

    திமுக முன்னிலை

    130 - வது வார்டு 41 தபால் வாக்குகள்

    திமுக முன்னிலை

    136 - வது வார்டு தபால் வாக்குகள்

    திமுக முன்னிலை

  • தபால் வாக்குகளை வார்டு வாரியாக தற்போது பிரிக்கப்பட்டு வருகிறது

  • மண்டலம் 5 

    52 வது வார்டு 47 தபால் வாக்குகள்.
    53 வது வார்டு 66 தபால் வாக்குகள் பதிவு

  • சாவியை தொலைத்த அதிகாரிகள்
    விருதுநகர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெட்டியின் சாவி தொலைந்ததால் பெட்டி உடைக்கப்பட்டு வாக்கு எண்ணப்படுகிறது.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • தாண்டையார் பேட்டை மண்டல்த்தில் 42,43,44,45,47 ஐந்து வார்டுகளில் மொத்தம் 210 தபால் வாக்கு பதிவாகியுள்ளது.

  • அண்ணா பல்கலைக்கழகம்: தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரஙகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அனைத்து கட்சி வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படவுள்ளது.

  • ராயபுரம் பகுதியில் வார்டு 49-53 தபால் வாக்கு பெட்டி பிரிக்கப்பட்டது.

  • தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது

  • கோடம்பாக்கம் மண்டலத்தில் மொத்தம் 16 வார்டுகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    127, 128, 129, 131, 137, 138

    130, 132, 133,134, 135,

    136, 139, 140, 141, 142 என வார்டுகள் பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு வார்டுக்கும் 14 சுற்றுகளாக நடைபெற உள்ளது.

  • பாரதி கல்லூரியில் உள்ளேன் மூன்றடுக்கு பாதுகாப்புடன் காவல்துறையினரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

  • வாக்கு எண்ணிக்கை தொடங்க இருப்பதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் கட்சி வேட்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் வந்த வண்ணம் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு முடிவுகளை தாமதமின்றி உடனுக்குடன் அறிவிக்க நடவடிக்கை

  • சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் 10 முதல் 14 மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

  • ஆலந்தூர் மண்டலம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    156 முதல் 161 வார்டுகள் 12 மேஜைகள்

    162 - 167 வார்டுகளில் 10 மேஜைகள் 

    வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

  • நெல்லையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு

  • வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிய வரும்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link