Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 27, 2022)
Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 27.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
Latest Updates
உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்”:
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலையை வன்மையாக கண்டிக்கிறோம். பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாக மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.சுற்றுலா வந்த 4 பேர் கவலைக்கிடம்: விபத்து
தருமபுரி மாவட்டம், ஒடசல்பட்டி அடுத்த கசியம்பட்டி என்கிற இடத்தில் இன்று மதியம் சொகுசுகார் ஒன்று சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த நான்கு பேர் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தேன் பூச்சி தாக்குதலில் இருந்து தப்பித்த தமிழக ஆளுநர் ரவி:
ஆளுநரின் கான்வாயும் கோவிலை வந்தடைந்த நிலையில், எதிர்பாரத விதமாக கோபுர கதவு அருகே மேல்பகுதியில் இருந்த மிகபெரிய தேன்கூட்டை புறா ஒன்று பறந்து வந்து மோதி்யதில் தேன்கூடு கலைத்துவிட்டது. இதனால் தேன் பூச்சிகள் ஆயிரக்கணக்கானவை வேகமாக பறந்து அங்கிருந்தவர்களையும் பக்தர்களையும் விரட்ட ஆரம்பித்தது.திராவிட மாடல்:
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை கட்டிப்பிடித்தது, மீனவப்பெண் பாலியல் பலாத்காரம், லாக் அப் மரணங்கள், பாஜக நிர்வாகி கொலை, சினிமாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது, கமிஷன் அடித்தது, BGR Energy-க்கு ஒப்பந்தம் வழங்கியது தான் திமுக அரசின் ஓராண்டு சாதனை. இதுதான் திராவிட மாடல் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டிமக்களின் நலனை காவலனாக காவலர்கள் இருக்க வேண்டும்:
காவலர்கள் நலனை கண்ணும் கருத்துமாக அரசு பேணி காக்கும். அதேபோல மக்களின் நலனை காவலனாக நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் -முதலமைச்சர் வேண்டுகோள்தி.மு.க மற்றும் அ.திமு.கவினர் இடையே கைகலப்பு!
போலீசார் முன்னிலையிலேயே அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற ஒப்பந்ததாரர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களிலிருந்து வந்திருந்த ஒப்பந்ததாரர்கள் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பெரும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.அடுத்த ஒரு மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மிதமான முதல் கனமான மழை
தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மிதமான முதல் பலமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளா?
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
திண்டுக்கல்லில் மதுபாட்டிலில் மிதந்த தவளை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் நெல்லூரைச் சேர்ந்த பாண்டி என்பவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய குவாட்டரில் கருப்பு நிறத்தில் குட்டித்தவளை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாண்டி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ள தமிழர்
தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சார்ந்த சரத் மனோகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், பிரேசில்,ஜெர்மனி, மலேசியா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் 4வது மிஸ்டர் நேஷனல் யுனிவர்ஸ் போட்டி தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த சரத் மனோகரன் தேர்வாகியுள்ளார்.
.
இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் "இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்று சுனாமி அறிவுறுத்தல் குழு தெரிவித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலையானது சென்னையில் இன்று சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4,775 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 38,200 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது.தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதேபோல நீட் பொதுத்தேர்வை எழுதும் மகளிரின் எண்ணிக்கை முதல் முறையாக 10 லட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி நீட் நுழைவு தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 18 லட்சம் பேர் பதிவு செய்துள்ள நிலையில், தமிழில் எழுத விண்ணப்பித்திருப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: அரசாணை வெளியீடு
Tnpsc, trb காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித்தேர்வுகளில் கட்டாய தமிழ்த்தாள தேர்வை எழுத மாற்று திறனாளிகளுக்கு விலக்கு 40%க்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்று திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியிட்டது தமிழ் நாடு அரசுதமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை
தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.டெல்டா பாசனத்திற்காக கல்லணை இன்று திறப்பு
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.ட்ரோன் திருவிழா - பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
நாட்டின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைக்கிறார்.எம்.பி.தேர்தல் - திமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்
மேல்சபை எம்.பி. தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக எஸ்.கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரி ராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று 3 பேரும் மனு தாக்கல் செய்கிறார்கள்.சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜூன் 2ம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என்றும் சென்னைப் பல்கலை.யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.