Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 29, 2022)

Sun, 29 May 2022-8:32 am,

Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 29.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...

 


Latest Updates

  • நடிகர் விஜய் கால்ஷீட் கொடுத்தால் இணைந்து நடிக்கத் தயார் 

    மலேசியாவில் செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதில்

  • பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • மருத்துவமனையில் டி ராஜேந்தரை நலம் விசாரித்தார் தமிழக முதல்வர்

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்திரனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். டி ராஜேந்திருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

  • பழனி  முருகன் கோவிலில்:  ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் சாமி தரிசனதிற்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பு

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில்  இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‌சாமிதரிசனம் செய்ய குவிந்தனர். பள்ளிகள் தொடர்  விடுமுறை என்பதாலும்  ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். படிப்பாதை, மின்இழுவை ரயில்,ரோப்கார் ஆகியவை மூலம் மலைக்கோவில் சென்ற  பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் மொட்டையடிக்கும் இடங்களில் முடி காணிக்கை செலுத்துவதற்காக அதிக அளவில் பக்தர்கள்  கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கான தேர்வுக்குழு அமைப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் எனவும், இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விருதாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுவினை தமிழக அரசு அறிவித்துள்ளது. மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனைத் தலைவராகக் கொண்டு செயல்படும் இக்குழுவில் நடிகர் நாசர், இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

  • முதல்வரை சந்தித்தார் டி.ஜி.பி.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சந்தித்தனர்.

  • சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி
    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் பெற்றார்.

  • ராமேஸ்வரத்தில் கடல் உள்வாக்கியது
    ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

  • 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை
    தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை நீடிக்கும். 

  • மதுரையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை
    அக்னி நட்சத்திரம் நேற்று பகலில் முடிவடைந்த நிலையில் மதுரையில் பலத்த காற்றுடன் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

  • பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
    சென்னையில் 6வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை . பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும்; டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.

  • கோவை ஆனந்தாஸ் உணவகங்களில் 2வது நாளாக சோதனை
    கோவை ஆனந்தாஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 2 ஆவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link