எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு விளக்கமளிக்கும் விதமாக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் அவர்,


தொடக்க கல்வி துறையில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது . இதில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து தொடக்கக் கல்வித் துறையை நடத்தினால் கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.


இதனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் குறையும். எனவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடக்கக் கல்வித் துறை நடத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ONE SIDE LOVE : லவ் சொல்ல மறுத்த இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற சைக்கோ!


தொடக்கக்கல்வித்துறையில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால், முந்தைய ஆண்டுகளை போலவே அங்கன்வாடி உதவியாளர்கள் மூலமாக தற்காலிகமாக பாடங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி விளக்கமளித்துள்ளார்.


மேலும் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:


2013-2014ஆம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் இக்கல்வியாண்டின் இறுதியில் தொடக்க வகுப்புகளை கையாளும் 14863 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 4863 காலிப் பணியிடம் ஏற்பட்டது. இதனால் 3,800 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளைக் கையாள ஒரே ஒரு ஆசிரியர் தான் உள்ளார். இந்த ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய வட மாவட்டங்களிலேயே உள்ளது. இதனாலேயே இந்த வட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக தமிழகத்தில் இருந்து வருகின்றன.


மேலும் படிக்க | அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனார் - போலீசில் சிக்கியவருக்கு என்ன கொடுத்தார்கள் ?


புதிதாக அமைந்த தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கையின் விளைவாக, குறிப்பாக 2021 மே மாதத்திற்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, பள்ளிகள் பாதுகாப்பாக திறக்கப்பட்டப் பின்னர் அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேல் புதிதாக மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதில் 1-5 வகுப்புகளில் மட்டும் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்து கூடுதலாக சேர்ந்துள்ளனர். இப்படி கூடுதலாக சேர்ந்த மாணவர்களுக்கு 1 : 40 என்ற விகிதத்தில் சுமார் 4,500க்கும் மேற்பட்ட கூடுதல் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தேவைப்படுகின்றது. 


ஏற்கனவே உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் மாணவர் சேர்க்கையால் தேவைப்படும் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 9,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டு தொடக்கக் கல்வியின் தரம் குறைய வாய்ப்பு அதிகமானது. இது சார்பாக அனைத்து உயர்மட்ட அலுவலர்கள் கூட்டம் கூட்டப்பட்டு விவாதித்து, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி LK.G / U.K.G வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை, 1-5 வகுப்புகளை கையாளுவதற்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவைப்படும் சூழலைக் கருத்தில் கொண்டு தொடக்கப் பள்ளிகளில் மீள பணியமர்த்தப்பட்டனர்.


மேலும், பெருந்தொற்று காலத்தில் சுமார் 600 நாட்களுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையினை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் எண்ணும் எழுத்தும் என்னும் திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.


எனவே, இந்தத் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தவும் சரியான பாதையில் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கும் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்திற்கு போதுமான எண்ணிக்கையில் இன்னும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.


4,863 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 4,519 கூடுதல் தேவை இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என சுமார் 9,000 இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்திற்கே தேவையுள்ள நிலையிலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்திடவும் அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டினை என முடிவு எடுக்கப்பட்டது.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்தினை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தும் போது, தமிழகத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இடையே உள்ள கற்றல் இடைவெளியைக் குறைத்து கற்றல் விளைவுகளில் மிக உன்னதமான நிலையை அடைய முடியும். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்பதாலும் 1-3 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டது.


இத்திட்டத்தினை நடைமுறைபடுத்துவதால் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 27ஆம் இடத்தில் இருக்கும் தமிழகம், முதல் 10 இடத்திற்குள் ஓர் இடத்தைப் பிடிக்கும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR