உள்ளாட்சி தேர்தலுக்காக 46 மாவட்டங்களுக்கு திமுக தேர்தல் பணி பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின்ன 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.


ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் நடத்தப்படும் தேர்தலில், இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி சார்பின்றியும், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடத்தப்படுகிறது.


இந்த தேர்தலில் போட்டியிட் லட்சக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 


உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்தின் 37 மாவட்டங்களில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.


இந்த 27 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக வருகிற 27-ஆம் தேதி 4,700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள், 260 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.


இரண்டாம் கட்ட தேர்தலில் (30-ஆம் தேதி நடைபெறும்) 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.


திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-


மாவட்டங்களில் நடைபெற வேண்டிய தேர்தல் பணிகளைத் கவனித்திட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 கட்சி மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, உள்ளாட்சி தேர்தலுக்காக சட்ட ஆலோசனைக் குழுவையும் திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளன விவரம் வருமாறு:-