Lockdown in Chennai: `காலை நடைபயிற்சி` செய்தவர்களுக்கு அபராதம் விதித்த சென்னை கார்ப்பரேஷன்
விதிகளை மீறி `காலை நடைபயிற்சி` மேற்கொண்ட மக்களுக்கு அபராதம் விதித்த சென்னை கார்ப்பரேஷன்.
சென்னை: கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் இன்று (வியாழக்கிழமை) காலை, பூங்காவில் நடைப்பயணம் மேற்கொண்ட ஒரு சில குடிமக்களுக்கு அபராதம் விதித்தது. குடிமை அமைப்பு (Civil Body) வெளியிட்ட ரசீதுகளின்படி, டி-நகரில் (T. Nagar) உள்ள ஒரு குடிமகனுக்கு வியாழக்கிழமை ரூ .100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு விதியை மீறி, "காலை நடைபயிற்சி" மேற்கொண்டதால், இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மற்றொரு குடிமகனுக்கு "காலை நடைபயிற்சி" (Morning Walk) மேற்கொண்டதாக கூறி ரூ .300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 (COVID-19) பரவுவதைக் கட்டுப்படுத்த முழுமையான ஊரடங்கு (Chennai Lockdown) நடைமுறையில் இருப்பதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்று ஒரு அதிகாரி கூறினார்.
READ | 30 ஆம் தேதி வரை கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து: EPS!
READ | சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
முன்னதாக சென்னையில் மீண்டும் போடப்பட்ட ஊரடங்கின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்!!
> சென்னையின் பிரதான சாலைகள் மூடப்படும்.
> காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது
> அருகில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் செல்ல வேண்டும்.
> உரிய காரணங்களின்றி வெளியே சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
> போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை
> கடந்த ஊரடங்குகளின் போது பெறப்பட்ட இ-பாஸ்கள் பயன்படுத்தக்கூடாது.
> இந்தமுறை புதிதாக இ-பாஸ் பெற வேண்டும்.
> சென்னை சாலைகளில் வழக்கமான போக்குவரத்திற்கு அனுமதியில்லை.
> முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
> அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்கள் அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
> பொது முடக்கத்தை கண்காணிக்க சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
> சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிக்கப்படும்.
> சென்னையில் இதுவரை 788 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.