சென்னை: தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசின் அறிவிப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன மற்றும் பல அரசியல் காட்சிகள் போராட்டம் நடத்துப்போவதாக அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை டாஸ்மாக் கடைகள்:


இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள், முன்பு அறிவித்தது போல, மே 7 அன்று திறக்கப்படமாட்டாது. இந்தா கடைகள் எப்பொழுது திறக்கப்படும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது. 



திருப்பூர் மாவட்டத்தில் நிபந்தனை: 


மேலும் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு வருபவர்கள் நிச்சையம் குடை கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்!


முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வந்ததால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


முதல் இரண்டு முறை போடப்பட்ட ஊரடங்கு உத்தரவில் எந்தவித தளர்வும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக மதுபானக்கடைகளை திறக்க அனுமதில் அளித்தது. 


மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி:


மத்திய அரசின் அனுமதியை அடுத்து, பல மாநிலங்களில் நேற்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. இதனைதொடர்ந்து தமிழகத்திலும் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுதொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது.


அதில், "அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மதுபானக் கடைகளை இயக்க உத்தரவிட்டுள்ளதால், எல்லைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் அண்டை மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குச் செல்கின்றனர். அத்தகையவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் நிறைய சிரமங்கள் எதிர்கொள்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மே 7 முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது." என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேவேளையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியது.