பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என அமமுக சார்பில் தேர்தல் அறிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும், போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் இரண்டாம் கட்டப் பட்டியலை இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ளது. 


இந்நிலையில், மக்களவைத் தேர்தலின் அமமுக சார்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை அறிவித்துள்ளார் டிடிவி தினகரன். 


அமமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:- 


> கிராமப்புறத்தில் சிறுவணிகக் கடன் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.


> ஊராட்சி ஒன்றியம்தோறும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


> ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.


> நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை. 


> கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.


> கிராமப்புறங்களில் இளைஞர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.


> பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்.


> தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். 


> ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூடப்பட்ட சிறு, குறு, தொழில்நிறுவனங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 


> சீன பட்டாசுகளை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 


> கனிமவளங்களை அரசே முன்னின்று எடுத்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.