மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக போட்டியிடவுள்ள 7 தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 5 தொகுதிகளில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல், பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுவதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுக்க அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில்,  அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட 5 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.


வேட்பாளர்கள் விவரம்:


1.   தருமபுரி - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இளைஞரணித் தலைவர், PMK மக்களவை உறுப்பினர், தருமபுரி.


2. விழுப்புரம் - திரு.வடிவேல் இராவணன், PMK பொதுச் செயலாளர்.


3. கடலூர் - மருத்துவர் இரா. கோவிந்தசாமி, PMK சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர்.


4. அரக்கோணம் - திரு.ஏ.கே. மூர்த்தி, PMK வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர். 


5. மத்திய சென்னை - முனைவர். சாம் பால், PMK தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர்.