AIADMK Candidates List 2024 In Tamil: மக்களவை தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக மொத்தம் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவித்துள்ளது. வடசென்னை தொகுதிக்குக்கு ராயபுரம் மனோ, தென்சென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், மதுரை தொகுதிக்கு டாக்டர் சரவணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் தொகுதிக்கு ராஜசேகர்,  அரக்கோணம் தொகுதிக்கு விஜயன், கிருஷ்ணகிரி தொகுதிக்கு ஜெயப்பிரகாஷ், ஆரணி தொகுதிக்கு கஜேந்திரன், சேலம் தொகுதிக்கு விக்னேஷ், தேனி தொகுதிக்கு நாராயணசாமி, நாமக்கல் தொகுதிக்கு தமிழ்மணி, ஈரோடு தொகுதிக்கு ஆற்றல் அசோக்குமார், கரூர் கே.ஆர்.எல்.தங்கவேல், சிதம்பரம் சந்திரஹாசன், நாகை சுர்ஜித் சங்கர், ராமநாதபுரம் ஜெயபெருமாள், விழுப்புரம் தொகுதியில் பாக்யராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 


அதிமுக கூட்டணி அறிவிப்பு


16 தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலையும் அதிமுக பொதுச்செயலாளர் இன்று அறிவித்தார். சென்னை, மதுரை வேட்பாளர்களை தவிர மற்றவரவர்கள் பெரிதாக அறிமுகமில்லாத புதுமுக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இன்று திமுக அதன் வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் அறிவிக்க இருந்த நிலையில், முகூர்த்த நாள் என்பதாலும் அதிமுக உடனடியாக திமுகவுக்கு முன்னரே இந்த வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளதாக தெரிகிறது.


மேலும் படிக்க | 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்... நாடு முழுவதும் உரிமைத்தொகை - திமுக தேர்தல் அறிக்கை



வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக கூட்டணியில் தேமுதிவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தேமுதிக - அதிமுக இடையே பேச்சுவார்த்தை நீடித்து வந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது" என்றார். 


தென்காசியில் கிருஷ்ணாசாமி போட்டி?


தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் தேமுதிக தரப்பில்  ராஜ்யசபாவில் ஒரு இடம் வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகவும் இதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.


ஜூன் 4இல் வெளியாகும் ரிசல்ட்


தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை மார்ச் 28ஆம் தேதியும், திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் உறுதியாகும். 


மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 தொகுதி என 40 தொகுதிகளையும் குறிவைத்து திமுக, அதிமுக, பாஜக ஆகியவற்றின் கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. இந்த மும்முனை போட்டியால் யாருக்கு யாரால் பலன் என்பது ஜூன் 4ஆம் தேதியே தெரியவரும் எனலாம். 


மேலும் படிக்க | திமுகவில் 50 சதவீதம் புதுமுக வேட்பாளர்கள்! யார் எந்த தொகுதியில் போட்டி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ