பாஜகவை கண்டு ஜோதிமணி பயப்படுகிறார் - கரூர் வேட்பாளர் செந்தில்நாதன்
TN Lok Sabha Elections: என்னையும் பாஜகவையும் கண்டு ஜோதிமணி பயப்பட ஆரம்பித்துள்ளார் என்று கரூர் பாஜக வேட்பாளார் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
TN Lok Sabha Elections: கரூரில் தேர்தல் பரப்புரையின்போது பணத்தைக் காட்டி வாக்காளர்களுக்கு ஆசையை தூண்டவில்லை என்றும் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பிபாளையம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை மலர் தூவி வரவேற்றனர்.
அப்போது பிரச்சாரத்தின் போது கூறியது செந்தில்நாதன், பிரச்சாரத்தின் போது 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் காட்டி வாக்காளர்களுக்கு ஆசையை தூண்டவில்லை மேலும் பணத்தை நான் காட்டவில்லை யார் காட்டியது என்று உங்களுக்கு தெரியும் வழக்கை முறையாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
மேலும் படிக்க | மனைவியோடு வாழாத மோடி, மக்களை மட்டும் எப்படி குடும்பமாக நினைப்பார்? முத்தரசன் காட்டம்
ஜோதிமணி பிரச்சாரத்தின் போது, என் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். என்னையும் பாஜகவை கண்டு ஜோதிமணி பயப்பட ஆரம்பித்துள்ளார். தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லாமல், இத்தனை நாள் தொகுதியில் இருந்தேன் என்று பட்டியலிட்டு கூறுகிறார். போகும் இடமெல்லாம் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. இந்த முறை பாஜக வெற்றி பெற்று விடுமோ என்ற பதட்டத்தில் எந்நேரமும் செந்தில்நாதன் என்று எனது பெயரையே நினைத்துக் கொண்டிருப்பதால் இவ்வாறு பேசி வருவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ