சென்னை: ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும், நடக்கவிருக்கும் 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் என மொத்தம் 22 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒருவேளை சாதகமான முடிவு வராவிட்டால், தகுதி நீக்கம் முடிவு கைக்கொடுக்கும் என்ற அடிப்படையில் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது குறித்து சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் சந்தித்து ஆலோசனை செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது, "22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, படுதோல்வி பயத்தில் மூன்று MLA-க்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.


ஒருவேளை, பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி நடவடிக்கை எடுத்தால் தி.மு.கழகம், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்." என எச்சரித்து பதிவிட்டுள்ளார்.