தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 67.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 96 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்து வருகிறது.


தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குபதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி தமிழகத்தில் மாலை 5 மணி வரை 67.73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாக்குமரி தொகுதியில் 50.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.