தூத்துக்குடி: இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் கூறியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட பல மாநிலங்களில் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்கள் முழு முனைப்புடன் நடந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்தியா முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. கேரள முதல்வர் இந்தியா கூட்டணி இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளார்.  இதற்கு காரணம் இது தேர்தலுக்கான ஒரு அமைப்பு என்று தெளிவுபடுத்தி உள்ளார்.  தலைமையில்லாத முதன்மையான கூட்டணி நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் ஒருபோதும் நம்பிக்கை அளிக்க முடியாது. 


தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அரசாக செயல்பட இந்த அரசு தவறிவிட்டது. சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் தொடர்ந்து சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.  அரசு விழித்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் துவங்குவதற்கு முன் போதை பொருள் நடமாட்டத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 


மேலும் படிக்க | சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்


பறவை காய்ச்சலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். மேகதாதுத அணை குறித்து சர்வ சாதாரணமாக அறிக்கையை கர்நாடகா முதல்வர் பத்திரிக்கையாளர்களிடம் வெளிப்படையாக பேசுவது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.  தமிழகத்தில் இங்கு டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும். நம்முடைய விவசாயிகளுக்கு பயிர் பிரச்சனை மட்டுமல்ல உயிர் பிரச்சனை. ஆட்சியாளர்கள் எந்தவித ஆக்ரோஷமான பதிலையும் எதிரொலிக்கவில்லை . இது கூட்டணி அரசியல். வாக்கு வங்கிக்காக விவசாயிகள் பக்கம் ஆட்சியாளர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். 


பிரதமரும் மத்திய அரசும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்ற அடிப்படையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என்ற அடிப்படையில் பிரிவுகள் பார்க்காமல் நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனர். அம்பேத்கரின் அரசியல் சட்டத்தை பின்பற்றுவது மத்திய அரசியல் வழிபாடாக வைத்துள்ளது. நான் அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். பாஜகவை பொருத்தவரை தங்கு தடை இன்றி ஒரு காலத்திற்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பல இடங்களில் அதிகரித்துள்ளது. வாக்கு சதவீதம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் நம்பிக்கை உள்ளது.  வாக்குச்சாவடிகளின் பலருக்கு வாக்குகள் இல்லை என்று வாக்களிக்க முடியாமல் நிராகரித்து இருப்பது ஏற்புடையது அல்ல. இதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | இஸ்லாமிய பெண்களின் ஆதரவு மோடிக்கு உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ