முதல்வரின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன்!

எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் திராவிட கட்சிகள் வாக்குப்பதிவு குறைந்ததற்கான குளறுபடிகளுக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற சந்தேகம் வருகிறது என தமிழிசை கேள்வி.  

Written by - RK Spark | Last Updated : Apr 23, 2024, 02:43 PM IST
  • மோடிக்கு வாக்களிக்க குவைத்தில் இருந்து வந்த குடும்பம்.
  • தமிழிசையை கண்டதும் மகிழ்ச்சியில் ததும்பிய பெண்
  • திருவொற்றியூர் கோவிலிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த தமிழிசை.
முதல்வரின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன்! title=

வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலான தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தென் சென்னையில் தம்மை போட்டியிட வைத்து உற்சாகப்படுத்திய மக்களுக்கு நன்றி எனவும் அதற்காக சாமிக்கு நன்றி சொல்வதற்காக தான் இந்த திருக்கோவிலுக்கு வந்ததாக, மேலும் இவ்வளவு பெரிய தேர்தலை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கும் சத்திய பிரதாசாகு அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!

மேலும் வாக்காளர்கள் குறைந்ததற்கான காரணமும் வாக்குப்பதிவு, சதவிகிதம் குளறுபடி காரணம் குறித்தும் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை கிடைத்தாலும் குரல் கொடுக்கும் திராவிட கட்சிகள் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு குரல் கொடுக்காதது ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறினார். மேலும் பிரதமரின் கருத்திற்கு கண்டனம் பதிவிட்ட முதல்வருக்கு தான் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். பிரதமர் மோடி கூறியிருப்பது காங்கிரசின் தேர்தல் அறிக்கை இடம் பெற்றிருந்த கருத்திற்கு எதிர் கருத்து தவிர இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து அல்ல, இஸ்லாமிய பெண்கள் தனியாக ஹஜ்  செல்வதற்கும் முத்தலாக் போன்ற சட்டங்களும் மற்றும் பல இஸ்லாமியர்களுக்கான தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் உழைத்துக் கொண்டிருப்பவர் மோடி தான் என்றார். மேலும் உதயநிதியின் சனாதன கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கானா முதல்வரின் கருத்து ஏற்புடையது நான் எனவும் பேசினார்.

அவரை அங்கு கண்டபெண் ஒருவர் மேடம் நாங்கள் மோடிக்காக உயிரை கொடுப்போம். வாக்களிக்கவே குவைத்தில் இருந்து தமிழ்நாடு வந்திருப்பதாகவும் மகிழ்ச்சி ததும்ப தெரிவித்தார். பின்னர் அந்த பெண்ணிடம் பேசிய பொழுது அவர் பெயர் பரமேஸ்வரி ராமகிருஷ்ணன் என்பதும் 25 ஆண்டுகளாக குவைத்தில் இருந்து வருவதாகவும், மோடிக்கும் அண்ணாமலைக்கும் வாக்களிக்கவே தாம் தமிழகம் வந்ததாகவும், சென்னையில் இருக்கும் தாம் தூத்துகுடியில் வாக்கு செலுத்திவிட்டு திருப்பதிக்கு சென்று அண்ணாமலைக்கும் மோடிக்கும் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டதாகவும் கூறினார். முன்னராக தமிழிசை சௌந்தரராஜனை பார்த்ததும் கணவன் - மனைவி ஜோடி தங்களுக்கு இன்று திருமண நாள் என கூறி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவே நல்லா இருங்கமா என வாழ்த்தினார். 

மேலும் படிக்க | 'கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழகம்...' அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள் - இபிஎஸ் நறுக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News