மேட்டுப்பாளையத்தில் இன்று பிரதமர் மோடியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரம்
PM Narendra Modi in Tamil Nadu: மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காரமடை நால்ரோடு பிரிவு அருகில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
PM Narendra Modi in Tamil Nadu: இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என நாடே களைகட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திற்கு இன்று மதியம் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேச இந்திய பாரதமர் மோடி வருகை தர உள்ளார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல் முருகன், கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக ஏ.பி. முருகானந்தம், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக வசந்த ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 10) மதியம் 1.50 மணியளவில் மேட்டுப்பாளயம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் காரமடை நால்ரோடு பிரிவு அருகில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
கடும் வெயிலை சமாளிக்கும் வகையில் பொதுமக்கள் அமர மின் விசிறிகள் வசதி உள்ளிட்டவைகளுடன் மேற்கூரையுடன் கூடிய அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் பிரதமர் மோடி வரும் ஹெலிகாப்டர் மற்றும் அவரது பாதுகாப்பு பணிக்காக உடன் வரும் ஹெலிகாப்டர்கள் என 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வகையில் மூன்று ஹேலி பேட் எனப்படும் இறங்கு தளங்களும் அமைக்கப்பட்டு இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இறக்கியும் ஏற்றியும் சோதனை ஓட்டம் நடைபெற்றுது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேலும் பொதுக்கூட்ட மேடை மற்றும் அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோப்ப நாய் சோதனையும் நடைபெறுகிறது. மேட்டுப்பாளைம் பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பிரதமர் வருகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அண்ணாமலை உள்ளிட்ட நான்கு தொகுதி வேட்பாளர்கள் மற்றும் வானதி சீனிவாசன் தமிழக பாஜக -வின் போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை பரப்புரை மேற்கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ