NTK Seeman Campaign In Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில், கோவை நாம் தமிழர் கட்சியின் மக்களவை தேர்தல் வேட்பாளர் கலாமணி ஜெகநாதனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
மக்களவை தேர்தலை (Lok Sabha Election 2024) முன்னிட்டு நடைபெற்ற இந்த பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் சீமான் பேசியதாவது, "கலவரத்தில் பிறந்தவர்கள்தான் பாஜகவினர். கலவரம் தான் அவர்களின் இலக்கு எனவும் யானைக்கும் மனிதனுக்கு மதம் பிடித்தால் அழிவு தான். பிறப்பில் உயர்வு தாழ்வு பாகுபாடு பார்க்கும் இவர்களில் இருந்து விடுதலை வேண்டும் என்பதே நம் கோட்பாடு. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது தான் நிஜம். சாதி, மதம், உணர்வு ஒழிந்த பிறகு தான் தமிழன் என்ற உணர்வு மேல் ஒங்கும்.
ரோட் ஷோ என்ற பெயரில் கரகாட்டம்...
சிவன், முருகன் வழிபடும் செய்யும் வீர கூட்டம்தான் நாம். யார் இங்கு சிறுபான்மை?, அவனுக்கும் ஜி.எஸ்.டி 18% தான், உனக்கும் ஜிஎஸ்டி 18% தான். மதத்தை காப்பாற்றி என்ன செய்ய போகிறீர்கள்? சாதியும் மதமும் மயிருக்கு சமம். சாதிக்கும் மதத்திற்கும் பார்த்து வாக்கு போடுவாய் என்றால் செத்து போ.
மேலும் படிக்க | தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது யார்? Fact Check செய்த பிடிஆர்!
மேலும் இவங்களுக்கு (பாஜகவிற்கு) ஓட்டு போட்டு என்ன பண்ணிட்டு இருக்காங்க. ரோட் ஷோ என்ற பெயரில் கரகாட்டம் ஆடிட்டு இருக்கிறார். ராமர் வேசம் போட்டு தினமும் ரோட்டில் பிட்சை எடுத்து வருகிறார்கள். யாராவது ராவணன் வேடம் போட்டு பிச்சை எடுக்கிறார்களா...? மேலும் ரூ. 500 கொடுத்து 500 கோடி கொள்ளை அடிப்பான். யாராவது பணம் கொடுக்க வந்தால் அவர்களை விரட்டி அடிக்க வேண்டும்.
காலையில் பரோட்டா, இரவில் கஞ்சா...
நேர்மையான அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி ஒற்றை ஆளாக சுதந்திரம் வாங்கி கொடுத்த மாதிரி பேசிட்டு இருக்கிறார், தம்பி அண்ணாமலை. திமுக எதிர்கட்சியாக இருந்தால் go back Modi, ஆட்சிக்கு வந்தவுடன் welcome Modi என்று சொல்லும் திமுகவை நம்பி மீண்டும் வாக்கு செலுத்த போகிறோமா...
திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது. அருணாசலம் பிரதேசம் போயி சீனாவுக்கு போயிருவன். இந்திகாரன் பையன் மூலம்தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். காலையில் புரோட்டா, நைட் கஞ்சா விற்பான் இந்திக்காரன். பாஜகவிற்கு ஏன் தமிழ்நாடு மக்களின் வாக்குகள் வேண்டும். 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டிற்கு என்ன செய்தார்கள், ஒன்றும் அவர்கள் செய்யவில்லை.
திமுக ஏன் டாஸ்மாக்கை மூடவில்லை?
காவேரி தண்ணீர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? காங்கிரசின் நிலைப்பாடு என்ன? மேகதாது அணை கட்டுவது குறித்து அண்ணாமலையின் நிலைப்பாடு?. பின்னர், சென்னை தாம்பரத்தில் ரயிலில் பிடிபட்ட 4 கோடி ரூபாய் கருப்பு பணம் எங்கு இருந்து வந்துள்ளது. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி செய்து எங்களை என்ன நிலைமையில் வைத்துள்ளீர்கள். திமுக இன்னும் ஏன் டாஸ்மாக்கை மூடவில்லை. 10 ஆண்டுகளில் பிரதமர் ஒருமுறையாவது பத்திரிக்கையாளர்களை சந்தித்து உள்ளாரா? ஜிஎஸ்டி வருவாய் பெருக்கம் எவ்வளவு? அதை மீண்டும் மக்களை சென்று சேர எப்படி திட்டங்கள் வகுக்கப்பட்டது.
உலகத்தின் குப்பை மேடாக மாறியது தான், கிளீன் இந்தியாவின் சாதனை. மேலும் புவி வெப்பம் ஆகுவதை ஏன் இன்னும் தடுக்கவில்லை. விண்ணுக்கு சந்திராயன், கழிவை மனிதன் பக்கெட்டில் அள்ளுவது தான் வளர்ச்சி என்கின்றனர். வாக்கு பெட்டியில் ஒன்னும் செய்ய முடியாது! தேர்வு எழுத போகும் மாணவிகள் மூக்குத்தியில் பிட் கொண்டு போகிறாள் என்பதை எப்படி நம்புகிறாய்.
தேசிய திருடர்களை உள்ளே விடாதே
தேசிய மலரான தாமரை சின்னத்தை எடு... இல்லையென்றால் புலி சின்னத்தை எனக்கு கொடு.. இல்லை காலிஃப்ளவரை தேசிய மலராக அறிவிப்பு செய். ரூபாய் தாள்களில் காந்தி படத்தை எடு, அதற்கு பிரதமர் மோடி படத்தை வேண்டுமானால் போடு. என்கிட்ட காசு இல்லை, இல்லான்ன வழக்கு போட்டுறுவன். கோவையை யூனியன் பிரதேசமாக அறிவித்து குஜராத் இணைக்க போறாங்களாம்... உன்னை கும்புடுகிறேன். அந்த விஷ செடிகளை வளர விடாதே... தேசிய திருடர்களை உள்ளே விடாதே...
தம்பி அண்ணாமலை கர்நாடகவில் நின்று எம்பியாக சொல்லு.. மதத்துக்கு ஒட்டு போடுவியா?? சாதிக்கு ஒட்டு போ?? நீயே முடிவு செய்து கொள். உன் இடத்தை தக்க வைத்துக்கொள். மக்களுக்கு நல்லதே நடக்க கூடாது என்பது தான் திராவிட சக்திகள்" என்றார். பின்னர் வருடம் 4 தேர்தல் நடக்குது என்ற பாடல் பாடியும், உன்னால் முடியும் பாடல் பாடியும், ஏற்றோம் வரணும் பாரு என்ற பாடல் பாடியும், ஒட்டு போட போற பொண்ணு பாடல் பாடியும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்.. வெளியே செல்வதை தவிர்க்கவும் -IMD எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ