பெண்கள் ஒரு முழம் பூ வாங்க கூட மு.க.ஸ்டாலின் கொடுத்த ரூ.1000 பயன்படவில்லை: அதிமுக வளர்மதி
காஞ்சிபுரம் திமுக எம்பி க.செல்வம் குறித்து விமர்சனம் செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடும் தாக்கி பேசுகையில், காஞ்சிபுரம் எம்.பியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என கூறினார்.
அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட கழகம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அறிமுக கூட்டம்,உத்திரமேரூரில் உள்ள இந்திராணி திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கழக மகளிரணி செயலாளரும்,தேர்தல் பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் வளர்மதி, அதிமுக வேட்பாளரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள்,பொதுமக்களிடையே சிறப்புரையாற்றி பேசுகையில், இந்த நாட்டின் உடைய தலையெழுத்தை நிர்ணயிக்க போவதே பெண்கள் தான். ஆனால் இந்த பெண்களுடைய தலைகளிலே மிளகாய் அறைத்தவரே மு.க.ஸ்டாலின் தான். மு.க.ஸ்டாலின் ஆயிரம் கொடுப்பார் என சொல்லியதை ஏற்று பெண்கள் ஓட்டு போட்டனர்.
ஆனால் மு.க.ஸ்டாலின் கொடுத்த ஆயிரம் ரூபாயை குடும்ப தலைவிகளின் கணவன்மார்கள் கொண்டு போய் டாஸ்மாக் கடையில் சரக்கை வாங்கி கொண்டு சில்லி சிக்கன் 65 வாங்கி சாப்பிட்டு விட்டு ஆயிரம் ரூபாயை காலி செய்துவிட்டதால் பெண்கள் தலையில் ஒரு முழம் பூ வைத்து கொள்ள கூட மு.க.ஸ்டாலின் கொடுத்த ஆயிரம் ரூபாய் பயன்படவில்லை. காலை கொடுத்த பணத்தை மாலையிலேயே பிடுங்கி விட்டனர். எனவே பெண்கள் மு.க.ஸ்டாலின் சொல்லும் பொய்களை எல்லாம் நம்ப வேண்டாம் என்றார்.
பெண்களுக்கு தருகிறோம் என கூறி விட்டு இப்பொழுது தகுதி உள்ள பெண்களுக்கு தான் என சொல்லுகின்றனர். சொந்த வீடு, கார், கழுத்தில் சங்கிலி, பெண் - பையன் வருமானம் என இது எல்லாம் இல்லையென்றால் ஆயிரம் தருவார்களாம். இந்த ஆயிரம் வாங்குவதற்கு இதை எல்லாம் தூக்கி போட்டு விட்டா வர வேண்டும் என கேள்வி எழுப்பி மகளிர் உரிமை தொகை குறித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி கடும் விமர்சனத்தை முன்வைத்து பேசினார்.
மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!
மேலும் சென்ற தடவை ஜெயிச்ச எம்.பியை நீங்கள் எல்லாம் பார்த்து இருக்க மாட்டீர்கள். இந்த காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் காணவில்லை. இந்த நிறத்தில் இருப்பார், இந்த கலர் சட்டை,பேண்ட் அணிந்து இருப்பார், கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என காவல்நிலையத்தில் கொடுத்தீர்களனால் அவரை பார்க்கலாம், அவரை கண்டுபிடிக்கலாம் என காஞ்சிபிரம் திமுக எம்.பி. க.செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், இந்த தேர்தலில் திமுக காரன்களுக்கு பெண்கள் தான் பாடம் புகுட்ட வேண்டும், சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உங்கள் நிதி மூலம் தேர்தலுக்கு முன்னரே கொடுக்க வேண்டும் தானே... ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், இதெல்லாம் ஏமாற்று வேலை, கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் கிலு கிலுப்பு காரன் வானத்தில் அது பறக்கிறது என்ன என்னமோ சொல்லுவதை நாம் வேடிக்கை பார்ப்போம். ஆனால் ஒன்றுமே வராது. அதே மாதிரி ஏமாற்று வித்தை காரணுங்க தான் இந்த திமுக்காரனுங்க, ஆகவே திமுககாரனுக்கு பாடம் புகுட்ட நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து, நமது வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை மகத்தான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ