இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. இதனால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 18 லட்சம் சரக்கு லாரிகள் ஓடாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வு, ஆர்டிஓ அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி  உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று லாரி உரிமையாளர் அறிவித்தது. 


இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய தரைவழி போக்குவரத்துதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை,  லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர், தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் தலைவர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தினர். 


தமிழகத்தில் சரக்கு லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மணல் லாரி உரிமையாளர்கள், காஸ் டாங்கர் லாரி உரிமையாளர்கள், சரக்கு புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் 4லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநிலங்களுக்கு நேற்று முதல் சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டது.  


லாரி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினால் தினசரி 5.ரூ ஆயிரம் கோடி சரக்கு பரிவர்த்தனை பாதிக்கப்படும். இதனால் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


சென்னை  குடிநீர் வாரியத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. இவை மாநகரம் முழுவதும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஒருநாள் இவைகள்  இயங்கவில்லை என்றாலும் மொத்த சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போகும்.