Instagram Atrocities: இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை: நொந்து நூலான தொழிலதிபர்
Instagram Atracities: உல்லாசத்திற்கு அழைத்து நிர்வாணப்படுத்தி பணம், நகை பறித்த பீனிக்ஸ் ஜோடி! இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை: சிக்கிய தொழிலதிபர் நொந்து நூலானார்
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூர் பகுதியில் சார்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனிடையே தன்னுடைய கணவர் துபாயில் இருக்கிறார் என்றும், தான் மட்டும் தான் வீட்டில் நோய்வாய்ப்பட்ட தாயுடன் தனியாக இருக்கிறேன் என இளம்பெண் கூறியுள்ளார் .எனவே நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று அந்த தொழிலதிபரிடம் ஆசை காட்டியுள்ளார். அதை நம்பிய தொழிலதிபர் கடந்த இரு தினங்களுக்கு முன் இளம் பெண் கூறியபடி பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த வீடு அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருந்தது .அவர் அந்த வீட்டுக்கு சென்றபோது ஒரு இளம்பெண் மட்டும் இருந்துள்ளார். அவரை படுக்கை அறைக்கு தொழிலதிபரை அழைத்துள்ளார்.
மேலும் படிக்க | எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: பொதுச்செயலாளராக தொடர்கிறார் இபிஎஸ்
அந்த நேரத்தில் திடீரென ஐந்து நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி வீடியோ மற்றும் போட்டோக்களையும் எடுத்துள்ளனர். தங்களுக்கு பணம் தராவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவரது கழுத்தில் கிடந்த நான்கு சவரன் செயின், செல்போன், ஏடிஎம் கார்டு, கார், பத்தாயிரம் பணம் மற்றும் காரில் இருந்த ஒரு சில ஆவணங்களையும் அந்த கும்பல் கைப்பற்றியது.
இதன் பின்னர் கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் அவரை மிரட்டி உள்ளனர். கொடுங்கல்லூரில் உள்ள தன்னுடைய பிளாட்டுக்கு சென்றால் பணம் எடுத்து தருவதாக அவர் கூறியுள்ளார். இதை அடுத்து அவரை காரில் ஏற்றி அந்த கும்பல் கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்றுள்ளது. ஆனால் வழியில் யூரின் வருவதாக கூறிய தொழில் அதிபர் காரிலிருந்து இறங்கியதும் தப்பித்து ஓடியுள்ளார்.
மேலும் படிக்க | இனி ஓ. பன்னீர்செல்வத்துக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை
நேராக பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்தில் சென்று நடந்த விவரங்களை கூறியுள்ளார். போலீசாரும் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.இந்த விசாரணையில் இன்ஸ்டா பிரபலம் கண்ணூரை சேர்ந்த கோகுல் தீப் இவரது மனைவி தேவ், கோட்டயம் பகுதியை சார்ந்த சரத் ,திருச்சூரை சார்ந்த அஜித், வினய் மற்றும் ஜிஷ்ணு ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கணவன் மனைவிமான கோகுல் தீப், தேவ்வும் சொந்தமாக ஒரு youtube சேனல் நடத்தி வருவதுடன், இன்ஸ்டாவிலும் மிகவும் பிரபலமாக வலம் வருபவர்கள் .இந்த கும்பலை சேர்ந்த சரத் என்பவர் பெண் போல தொழிலதிபரிடம் முதலில் சாட்டிங் நடத்தியுள்ளார்.
தொழிலதிபர் தன்னுடைய வலையில் சிக்கியதும் கோகுல் தீப் மற்றும் தேவுவை சந்தித்து பணம் தருவதாக கூறி இந்த மோசடியில் அவர்களை ஈடுபடுத்தி உள்ளார். மற்ற மூன்று பேரும் சரத்தின் கூட்டாளிகள் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது .தொடர்ந்து விசாரணைக்கு பின் ஆறு பேரையும் போலீசார் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தயார்: அமைச்சர் செந்தில் பாலாஜி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ