முதலில் தங்க செயின், அடுத்து ரூ.5 லட்சம் பணம்... மாணவியை மிரட்டிய நபரை அலேக்காக தூக்கிய போலீஸ்!
கல்லூரி மாணவியிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி சென்னைக்கு படிக்க சென்ற போது அங்கு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த முகேஷ் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் முகேஷின் நடவடிக்கை சரியாக இல்லாததால் அவரை விட்டு அந்த பெண் பிரிந்து சென்றுள்ளார். அப்பொழுது அவருடன் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு ரூபாய் 5 லட்சம் தரவில்லை என்றால் இணையம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து விடுவதாக அந்த பெண்ணிடம் தொலைபேசி வாயிலாக கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் அந்தப் பெண்ணின் தம்பியிடம் போலி இன்ஸ்டாகிராம் ஐடிகள் மூலம் தொடர்புகொண்டு அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.
மேலும் படிக்க | கமலுக்குக் கோவில் கட்டிய ரசிகர்கள்! - அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?
மேலும் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு மிரட்டி கல்லூரிக்கு வெளியே வருமாறு அழைத்து அவரின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த பெண் முகேஷ் மீது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்தார். புகார் மீது விரைந்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரி கிரன் பிரசாத் IPS சைபர்கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் மற்றும் சைபர் கிரைம் போலீசார் முகேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .
விசாரணையில் முகேஷ் அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் என மிரட்டியது தெரிய வந்தது. பின்னர் அவரை சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்தி கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேலும் படிக்க | அடுத்தடுத்து பிரச்சினைகள்.. விஜய் 66 ஷூட்டிங் திடீர் நிறுத்தம்! - நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR