LPG Cylinder Price in September: செப்டம்பரில் எல்பிஜி சிலிண்டர் விலையில் என்னனென்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பதைக் குறித்து பார்ப்போம். நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (HPCL, BPCL, IOC) டெல்லியில் மானியமில்லாத எல்பிஜி சிலிண்டர்களின் (LPG Gas Cylinder) விலையை உயர்த்தவில்லை. டெல்லியில் 14.2 கிலோ மானியமில்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .594 ஆக உள்ளது. அதாவது சென்ற மாதம் விற்க்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல இந்த மாதத்தில் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் (LPG Cylinder Price In Chennai)  விலை ரூ. 610 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் இதன் விலை ரூ.610.50 ஆக இருந்தது. அதன் அடிப்படையில் 50 காசுகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.


ALSO READ |  உங்கள் வாழ்க்கை மற்றும் பணம் தொடர்பான இந்த 6 விஷயங்களில் செப்டம்பர் 1 முதல் மாற்றம்


கொல்கத்தாவில் (LPG Cylinder Price In Kolkata) எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஒரு சிலிண்டருக்கு 50 பைசா அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 2 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


ஐ.ஓ.சி (iocl.com) வலைத்தளத்தின்படி, டெல்லியில் 19 கிலோ எல்பிஜி (LPG Cylinder Price In Delhi) சிலிண்டர் ரூ .2 குறைந்துள்ளது. இப்போது இதன் விலை ரூ .1133 க்கு கிடைக்கிறது. கொல்கத்தாவில் ரூ .1198.50 லிருந்து ரூ .1196.50 ஆக குறைந்துள்ளது. மும்பையில் இதன் விலை ஒரு சிலிண்டருக்கு ரூ .1091 லிருந்து 1089 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1253 லிருந்து ரூ .1250 ஆக விலை குறைக்கப்பட்டது.