COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி....! 


பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என  பேரணிக்கு பின்னர் மு.க.அழகிரி பேட்டி.  



மு.க.அழகிரி சார்பில் அமைதிப்பேரணி திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் இருந்து தொடங்கியது....! 




கருணாநிதி நினைவிடத்தை நோக்கி ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி இன்று அமைதி பேரணி....


கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். 


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் உண்மையான தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து, மதுரையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5 ஆம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருந்தார். 


அதன்படி, தனது ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி இன்று அமைதி பேரணி நடத்துகிறார். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்குகிறது. 


இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவாளர்களும் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. 


அங்கு, மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மேலும், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.