பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினரை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ள சி.பி.எஸ். பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும்.


என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சென்னை எழிலகத்தில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர்.


இந்நிலையில், பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினரை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்!


பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களை பேசிய அவர், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சி வந்தால் தான் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் குறிப்பிட்டார்.