அசாதாரண சூழ்நிலை நிலவி தமிழக அரசியலில் சசிகலா ஆதரவு அமைச்சர் ஒருவர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக பொதுச் செயலாளர் விகே சசிகலா மற்றும் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசினார். ஆளுநரிடம் சசிகலா தரப்பில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்கள். முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில் ஆளுநர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார். 


இந்நிலையில் பல்வேறு முன்னாள் அமைச்சர்களும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்து வரும் நிலையில் நேற்று வரை சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா பாண்டியராஜன் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். கட்சியின் ஒற்றுமைக்காகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதோடு முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க பாண்டியராஜன் முடிவு செய்துள்ளார்.


 



 


 



 


 



 


இந்நிலையில் முதல்வர் பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா தரப்பில் இருந்து முதல் முறையாக அமைச்சர் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறுவது குறிப்பிடத்தக்கது.


கிருஷ்ணகிரி அசோக் குமார், நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.