தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக வத்தலகுண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது வாடிப்பட்டி அருகே நான்கு வழி சாலையில் வந்துகொண்டிருந்த போது, திடீரென அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சென்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எந்த வயதினருக்கு எந்த கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்?... முழு விளக்கம்


திடீரென மருத்துவமனை உள்ளே வந்ததால் ஊழியர்கள் அனைவரும் பதற்றமாகினர். இதையடுத்து மருத்துவமனை வளாகம், சுகாதார நிலைய நோயாளிகள் அறை உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சோதனை செய்தார். வருகைப் பதவேட்டை எடுத்து வருமாறு கூறிய அமைச்சர், அதில் தற்போது பணியில் இருக்க வேண்டியவர்கள் யார் யார் என்ற விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, அய்யங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் பூபேஷ் குமார் என்பவர் உரிய தகவல் கூறாமல் பணியில் இல்லாதது தெரிய வந்தது. 


உடனடியாக அங்கிருந்தவாறே உயர் அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், உரிய தகவல் தராமல் பணிக்கு வராமல் இருந்த மருத்துவ அதிகாரி பூபேஷ் குமார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். 


பின்னர் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடம் குறைகளையும், அரசு ஊழியர்களின் சேவைகளைக் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, அரசு ஊழியர்களிடமும் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், அவர்களின் குறைகளையும் கேட்டுக்கொண்டார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின் போது மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 


மேலும் படிக்க | அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR