உண்மையில் தற்கொலைக்கு முயன்றாரா பிக் பாஸ் மதுமிதா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா, தங்களை மிரட்டியாதாக பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் சமரசம் செய்ய வேண்டும் என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா, தங்களை மிரட்டியாதாக பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் சமரசம் செய்ய வேண்டும் என நடிகை மதுமிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்க ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் மூன்றாம் சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது.,
100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களை கொண்டு துவங்கியது. இவர்களில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, அபிராமி ஆகிய 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் இதனிடையே நடிகர் சரவணன், நடிகை மதுமிதா சில காரணங்களால் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆரம்பத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் விருந்தாளியாக வீட்டினுல் சென்றுள்ளார், இந்நிலையில் தற்போது 9 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் பிரபலங்கள் தங்களுக்குள் தேவையில்லாத பிரச்சனைக்காக வம்பிழுத்து சண்டையிட்டு பொழுதை கழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி அவ்வப்போது சர்ச்சைக்களில் சிக்கி வருகின்றது.
அந்தவகையில் தன்னை தமிழ் பொண்ணு என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பிக்பாஸில் வலம் வந்த நகைச்சுவை நடிகை மதுமிதா 42-வது நாளில் திடீரென வெளியேற்றப்பட்டார். கையில் கட்டுடன் வெளியேற்றப்பட்ட மதுமிதா தனக்கு தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
எனினும் உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றாரா? இல்லை நிகழ்ச்சி நடத்துபவர்களே காரணமா? என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இதனிடையே மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஊதிய விவகாரத்தில் தனக்கு சேர வேண்டிய பாக்கி தொகையை இரு தினங்களில் வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மதுமிதா வாட்ஸ் அப் கால் மூலம் மிரட்டியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் நடிகை மதுமிதா செய்தியாளர்களை சந்தித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகளுக்கு உட்பட்டு தற்போது வரை தான் எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது எனவும் தன் மீது பொய்யான புகாரை கொடுத்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் மதுமிதா தெரிவித்தார்.
மேலும் இது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் தான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.