‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்ற வாசகத்தை ஆங்காங்கே கேள்வி பட்டிருப்போம். அப்படி தன்னிடம் வருபவர்களையெல்லாம் வாரி அணைத்து வாழ வைக்கும் இடம் சென்னை மட்டுமே. வருடா வருடம் ஆகஸ்டு 22ஆம் தேதிகளில் மெட்ராஸ் தினம் (சென்னை தினம்) கொண்டாடப்படுகிறது. இன்று, 384வது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களுக்கு மெரினா, காய்கறி வாங்க கோயம்பேடு மார்கெட், கிரிக்கெட் ஞாபகம் வந்தால் சேப்பாக்கம், கோயில் ஸ்தலங்கள் என்றால் மைலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேனி. இப்படி சென்னையில் இல்லாத விஷயங்களே இல்லை. சென்னை வாசிகளுக்கு மட்டுமன்றி, பிழைப்பு தேடி சென்னை வந்தவர்களுக்கு “மெட்ராஸ்” என்பது ஒரு வார்த்தையாக அல்லாமல் உணர்வாகவே கலந்து விட்டது. சென்னையை சுற்றி பார்க்க உள்ளூரில் இருந்து மட்டுமல்லாமல், உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அப்படி சென்னையில் அதிகமானோரின் வருகையை பார்த்த இடங்கள் யாவை..? இதோ பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.மெரினா:


சென்னைக்கு அடையாளமாக கூறப்படும் சுற்றுலாத்தளங்களுள் ஒன்று, மெரினா கடற்கரை. சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பங்களின் விருப்பமான ஸ்பாட்டாக விளங்கும் இது, பிற நாட்களில் காதலர்கள் மனம் விட்டு பேச சிறந்த இடமாக அமைகிறது. கல்லூரியை கட் அடிக்கும் மாணவர்களுக்கும், நிம்மதியை தேடி தனிமையில் திரியும் இதயங்களுக்கும் இது ஒரு விதமான சொர்கம். மெரினா கடற்கரையை நம்பியே பல ஆயிரம் வியாபாரிகள் இருக்கின்றனர். கிராமங்களில் இருந்து சென்னைக்கு வருவோருக்கும் சரி, வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாட்டை சுற்றி பார்க்க வருவோருக்கும் சரி, மெரினா கடற்கரை ஒரு பொதுவான தளம். இங்கு, எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் சமாதிகள் இருக்கின்றன. இதை பார்ப்பதற்கென்றே பலர் மெரினாவிற்கு வந்து செல்கின்றனர். 


மேலும் படிக்க | ‘‘ஹிட்லரின் சகோதரர்கள் ஸ்டாலின், ஈபிஎஸ் என காட்டம் காட்டும் தினகரன்


2.வண்ணாரப்பேட்டை:


Old Washermanpet என்ற ஆங்கில பெயர், பின்னாளில் மறுவி வண்ணாரப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் நாம் முதலில் போக வேண்டிய இடங்கள் வண்ணாரப்பேட்டை, பாரிஸ் மற்றும் தி.நகர். இங்கு கையில் காசுடன் நுழைந்தால் ஒரு புது வீட்டிற்கு தேவையான பொருட்களை முழுதாக வாங்கி வந்துவிடலாம். கிராமங்களில் நடக்கும் திருமணங்களுக்கு கூட, இங்கு வந்து ஆடை எடுத்து செல்கின்றனர் பலர். வண்ணாரப்பேட்டை பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான சாலை ஓர கடைகள் இருக்கின்றன. இங்கு சென்றால் வகை வகையான வட இந்திய உணவுகளை ஒரு கை பார்த்து வந்துவிடலாம். வண்ணாரப்பேட்டையில் எந்த தெருவிற்குள் நுழைந்தாலும் தமிழ்நாட்டை விட்டு எங்கோ தள்ளி வந்தது போன்ற உணர்வு இருக்கும். குறிப்பாக ஹோலி கொண்டாட்ட சமயங்களில் இங்கு சென்றால் நண்பர்களுடன் நன்றாக கலர் பூசி ஓடி ஆடி மகிழ்ந்து விளையாடி வரலாம். நீங்கள் சென்னை வாசியாக இருந்தாலோ, அல்லது சென்னையை சுற்றி பார்க்க வர விரும்பினாலோ கண்டிப்பாக வண்ணாரப்பேட்டையை சுற்றி பாருங்கள். 



3.செயிண்ட் ஜார்ஜ் கோட்டை: 


பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஆண்ட போது கட்டப்பட்டது செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. இது, தற்போது சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில், 16ஆம் நூற்றாண்டுகளில் இருந்த பொருட்களின் மாதிரிகள் மற்றும் மாதிரி படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரலாற்று பிரியர்களுக்கு சென்னையில் மிகப்பிடித்த ஸ்பாட் இது. 


4.அண்ணா உயிரியல் பூங்கா:


வண்டலூர் அல்லது அண்ணா உயிரியல் பூங்கா, சென்னையை தாண்டி பல மாநிலங்களிலும் பிரபலமாக அறியப்படுகிறது. மிருகங்களை பிடித்தவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் இது. இந்த இடத்தில் 500க்கும் மேற்பட்ட வகையிலான மிருகங்கள் இருக்கின்றன. மொத்தம் 32 கிலோ மிட்டர் சுற்றளவில் இருக்கும் இந்த பூங்காவிற்கு வாரா வாரம் பலர் குடும்பங்களுடன் நேரம் செலவிட வருகின்றனர். நண்பர்களுடன் வரும் சிலர், இங்கு வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு பூங்காவை சுற்றி பார்ப்பர். சென்னைக்கு வருவோர் இந்த இடத்தை சுற்றி பார்க்காமல் செல்வதில்லை. 


5.கோயில் ஸ்தலங்கள்:


சென்னையில் மட்டும் பல ஆயிரம் கோயில்களுக்கு மேல் உள்ளன. குறிப்பாக, திருவல்லிக்கேணி மற்றும் மைலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு அடையாளமே கோயில்கள்தான். சென்னை பார்த்தசாரதி கோயில், உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. அறுபத்து மூவர் என்ற திருவிழா, சென்னையில் கொண்டாடப்படும் திருவிழாக்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இவை அல்லாமல், சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோயில், தி.நகரில் உள்ள சின்ன திருப்பதி, பாரிஸில் உள்ள கந்தசாமி கோயில், வடபழநியில் உள்ள முருகன் கோயில் என பிரபலமான கோயில்களின் பெயர்களை சொல்லிக்கொண்டே பாேகலாம். 


சென்னைை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மசூதி, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள பெரிய மசூதி உள்ளிட்டவையும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பகுதிகள். சாந்தோம் தேவாலயம், சின்ன மலை தேவாலயம், அன்னை வேளாங்கண்ணி தேவாலையம் போன்றவை மக்களால் அதிகம் விசிட் செய்யப்படும் இடங்கள் ஆகும். 


மேலும் படிக்க | அடுக்குமாடியை சீரமைக்க ஜெயின் ஹவுசிங் நிறுவனம் உறுதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ