மயிலாப்பூரில் சிலைகள் மாயமான வழக்கில் கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பு வகித்த TVS குழுமத் தலைவர் சீனிவாசன் அவர்களை கைது செய்ய 6 வார காலத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க பழமையான மயில் சிலை ஒன்று திருடப்பட்டதாக புகார் எழுந்தது.


தொன்மையான மயில் சிலை மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை புகார் ஏதும் அளிக்காமல் இருந்த நிலையில் பக்தர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர்.


இந்நிலையில் மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களின் அறங்காவலர் குழு தலைவராக இருந்த, TVS குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் நேற்று  முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 


இந்த மனு, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் 6 வார காலத்திற்கு கைது செய்யமாட்டோம் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினர் உத்தரவாதம் அளித்தனர். 
இதனையடுத்து TVS குழுமத் தலைவர் சீனிவாசன் அவர்களை கைது செய்ய 6 வார காலத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது!