சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட 5 வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அங்கு இடம் ஒதுக்க முடியாது எனவும், பல சட்ட சிக்கல்கள் உள்ளது. காமராஜ் நினைவகம் அருகே 2 ஏக்கர் நிலம ஒதுக்கப்டும் என தமிழக அரசு அறிவித்தது.


தமிழக அரசின் அறிவிப்புக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பல இடங்களில் திமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.


இதற்கிடையே, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்துள்ள வழக்குகளையும் திரும்ப பெற தயாராக இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதிக்க கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 


ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என டிராபிக் ராமசாமி கூறினார்.