18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: அக். 4 ஒத்திவைப்பு
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4-ம் தேதி சென்னை ஐகோர்ட் ஒத்திவைப்பு. மறு உத்தரவு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்க தடை- சென்னை ஐகோர்ட். நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தடை நீட்டிப்பு: சென்னை கோர்ட் உத்தரவு.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4-ம் தேதி சென்னை ஐகோர்ட் ஒத்திவைப்பு
மறு உத்தரவு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்க தடை- சென்னை ஐகோர்ட்
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தடை நீட்டிப்பு: சென்னை கோர்ட் உத்தரவு
மறு உத்தரவு வரும் வரையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது: சென்னை கோர்ட்
திமுக வழக்குக்கும் தினகரன் தரப்பு வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என கூற முடியாது- கபில் சிபல்
பெரும்பான்மையை நிரூபிக்க போடப்பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டிக்கலாம் - சபாநாயகர் தரப்பு
சபாநாயகர் குறித்து கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை வைப்பது கண்டனத்திற்குரியது: சபாநாயகர் தரப்பு
18 எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிராக செயல்படவில்லை- தவே
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதால் முதலமைச்சருக்கான ஆதரவை திரும்பப் பெற்றோம்- தவே
முதல்வரை மாற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை- தவே
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- தவே
அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்- தவே
அடிப்படை உறுப்பினராக நீடிக்கும்போது கொறடா உத்தரவால் எங்களை எப்படி நீக்க முடியும்? தவே
எம்.எல்.ஏக்களை நீக்கும் முன்பு ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும்: துஷ்யந்த் தவே
எடப்பாடி அரசைக் காப்பாற்றுவதுதான் சபாநாயகரின் நோக்கம்: தவே
கட்சி தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்- தவே
சென்னை ஐகோர்டில் வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி துரைசாமி முன்பு விசாரணை நடைபெறுகிறது.
சபாநாயகர் தனபால் சார்பில் அரிமா சுந்தரம் வாதிடுகிறார்.
தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகியுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வைத்தியநாதன், சோமயாஜி ஆஜர் ஆகியுள்ளனர்.
ஆளுநர் சார்பாக ராகேஷ் திவேதி ஆஜர் ஆகியுள்ளனர்.
மாநில அரசு சார்பாக சுப்ரமணிய பிரசாந்த் ஆஜர் ஆகியுள்ளனர்.
18 எம்.எல்.ஏ-க்கள் சார்பாக சல்மான் குர்ஷித், துஷ்வந்த தவே ஆஜர் ஆகியுள்ளனர்.
திமுக சார்பில் கபில் சிபில் ஆகிய முத்த வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர்.
டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று முறையீடு செய்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை தொடக்கி உள்ளது.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கிக்கொண்டதற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இதற்க்கு யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்.
இந்நிலையில், அவர்கள் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இதனை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி துரைசாமி அனுமதி அளித்தார். தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணை, இன்று திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
எம்எல்ஏக்கள் தங்கள் மனுவில், அதிமுகவில் இருந்து விலகவோ, வேறு கட்சியில் சேரவோ இல்லை. கட்சி மாறாத நிலையில், எங்கள் மீது கட்சி தாவல் சட்டம் செல்லாது. சபாநாயகர் முடிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.