மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது -உயர்நீதிமன்ற கிளை..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் தான் தான் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (வயது 38) என்ற பெண் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார். 


அந்த மனுவில் அவர் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி 1980 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பிறந்ததாகவும் கூறியிருந்தார். தன்னுடைய வளர்ப்பு தாய் சைலஜா 2015 ஆம் ஆண்டு இறந்துவிட்டதாகவும், வளர்ப்பு தந்தை சாரதி அதே ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி  இறந்துவிட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். 


தாம் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிருபிக்க அவரது அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவையே புரட்டிப்போடு சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது. 


இந்த மனு குறித்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணை செய்த உயர்நீதிமன்ற கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.