மறைந்த முன்னாள் ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் வரும் 6-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது 3 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் சமர்பித்த விண்ணப்பங்களில் ஜெயலலிதாவின் கைரேகை இடம் பெற்றது. 


இது தொடர்பாக திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். சுயநினைவோடு தான் ஜெயலலிதா கைரேகை வைத்தரா என விசாரிக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 


3 தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்யவும் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் ஜெயலலிதா கைரேகை உண்மையா என கேள்வியெழுப்பியுள்ளது. 


இது தொடர்பாக தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி முதன்மை செயலாளர் வில்பர்டு நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.