MHC On Sanatan Dharma Issue: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), சேகர் பாபு மற்றும்  திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான கோ வாரண்டோ வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court) வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சனாதான  ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


காவல்துறை மீது நீதிபதி அதிருப்தி


பிரிவை ஏற்படுத்தும் எந்த கூட்டத்துக்கும் அனுமதி வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் (Sanatan Dharma Issue) கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்  காவல் துறையினர் கடமை தவறிவிட்டதாகவும், இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | கண்டித்த ஆளுநர் ஆர்.என். ரவி - நாகா மக்களை இழிவுப்படுத்தினாரா ஆர்.எஸ். பாரதி?


அமைச்சர்களுக்கு நீதிபதி அறிவுரை


அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும் எனவும், குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக, மது, போதை பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தினார்.


உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?


கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin Speech) உரையாற்றி இருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றார். 


மேலும், சனாதன தர்மத்தை கொரோனா வைரஸ், மலேரியா மற்றும் டெங்கு வைரஸ் மற்றும் கொசுக்களால் ஏற்படும் காய்ச்சலுடன் ஒப்பிட்டு, இதுபோன்ற விஷயங்களை எதிர்க்கக்கூடாது, அழிக்க வேண்டும் என்றார். இதற்கு வலதுசாரிகள் மற்றும் பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது, பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களை "இனப்படுகொலை" செய்ய உதயநிதி அழைப்பு விடுத்ததாக பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறைப் பொறுப்பாளர் அமித் மாளவியா அப்போது கூறியிருந்தார். 


பின்வாங்காத உதயநிதி


அதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தையே ஒழிப்பதாக தான் பேசியதாகவும், அதனை பின்தொடரும் மக்களை அல்ல என விளக்கமளித்தார். தான் பேசியதை திரித்து பொய் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் என்றும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது நினைவுக்கூரத்தக்கது. 


மேலும் படிக்க | வாகன ஓட்டிகளே உசார்! இந்த வேகத்திற்கு மேல் சென்றால் ரூ. 1000 அபராதம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ